Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.12000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மார்கெட் மிரளும் விதமாக ரூ.7000 விலை குறைப்பில் 108 எம்பி மெயின் கேமரா, 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000mAh பேட்டரி, 33 ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கும் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) கிடைக்கிறது. ஆல்-ரவுண்ட் சார்ஜிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், ஏஐ வாய்ஸ் ஹாலோ போன்ற பட்டையை கிளப்பும் டெக்னாலஜிகளையும் பேக் செய்துள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் போனின் விவரங்கள் இதோ.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 5G Specifications): இந்த நோட் மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், ஆக்டிவ் ஹாலோ லைட்னிங் (Active Halo Lighting) வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டரும் பேக் செய்யப்பட்டுள்ளது.

யாரு சாமி அவன்.. ரூ.12000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 16GB ரேம் மாடல்!

3X ஜூமிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. டிஸ்பிளேவில் அமோலெட் (AMOLED) பேனல் வருகிறது. 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே சைஸ், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

இதுபோக 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவில் கிடைக்கிறது. ஆகவே, கேமரா மற்றும் டிஸ்பிளே அவுட்புட் மிட்-ரேஞ்ச் குவாலிட்டி கொடுக்கும். ஆனால், பட்ஜெட் விலையில் ஆர்டருக்கு கிடைக்கிறது. கேமரா மட்டும் போதாது, பர்ஃபாமென்ஸ் பக்காவாக இருக்க வேண்டும் என்று கேட்பது புரிகிறது. இந்த மாடலில் அதுக்கும் குறையில்லை.

ஏனென்றால், 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 (6nm MediaTek Dimensity 7020) எஸ்ஓசி கிடைக்கிறது. இதுவொரு ஜிபியு ஐஎம்ஜி பிஎம்எக்ஸ் 8256 GPU (IMG BXM 8256) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் (Octa Core) மாடலாகும். இன்பினிக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) வருகிறது. ஓஎஸ் ஆண்ட்ராய்டு 14 (Android 14) ஆக இருக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனில் 8 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 1 டிபி மெமரிக்கான எஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.12000 பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பேட்டரி சிஸ்டம் இந்த இன்பினிக்ஸ் போனில் கிடைக்கிறது.

ஏனென்றால், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் இந்த பட்ஜெட்டில் கிடைக்காதது. ஆகவே, இது வரவேற்கத்தக்க பீச்சராகும். மேலும் ஜேபிஎல் (JBL) பவர்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இருக்கின்றன. மேலும், டூயல் மைக்ரோபோன்கள் (Dual Micro Phones) பேக் செய்துள்ளது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தள்ளுபடியில் (Flipkart Discount) ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு இந்த பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 40 5G With 108MP Camera Sale Under Rs 13000 in Flipkart Discount Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X