Home
Mobile

ஆர்டர் வெளுக்கும்.. ரூ.15,999 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

108 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொண்ட இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) போனானது, ரூ.4000 தள்ளுபடியுடன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 5G Specifications): இந்த நோட் மாடலில் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

ஆர்டர் வெளுக்கும்.. ரூ.15,999 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம் போன்!

மேலும், 3X சூப்பர் ஜூமிங் சப்போர்ட் மற்றும் ஆக்டிவ் ஹலோ லைட்னிங் (Active Halo Lighting) வருகிறது. இந்த லைட்னிங் மூலம் கால்கள், சார்ஜிங், கேம்ஸ், மியூசிக் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். இந்த போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 6.78 இன்ச் (2436×1080 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.

இதுவொரு ஃபுல்எச்டிபிள்ஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே (AMOLED Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், 10 பிட் கலர் டெப்த் கொண்டிருக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் உள்ளது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனில் 8ஜிபி விர்ச்சுவல் ரேம் + 8ஜிபி ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் வருகிறது.

ஆர்டர் வெளுக்கும்.. ரூ.15,999 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம் போன்!

மேலும், எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) மற்றும் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) வருகிறது. ஜேபிஎல் (JBL) பிராண்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. அதேபோல டூயல் மைக்ரோபோன்கள் வருகின்றன.

இந்த மாடலானது, பேட்டரியில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் மேக்னடிக் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் சப்போர்ட் வருகிறது. மேலும், ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட் சார்ஜ் 2.0 (All-Round FastCharge 2.0) டெக்னாலஜி வருகிறது.

இதற்காக பிரத்யேகமாக சீட்டா எக்ஸ்1 சிப் (Cheetah X1 Chip) கொண்டிருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் மாடலில் IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் டைட்டன் கோல்டு (Titan Gold) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு வர இருக்கிறது. இந்த போனின் விலை ரூ.19,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.2000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் இந்த 108 எம்பி கேமரா, மேக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். ரூ.1999 மதிப்புள்ள மேக்பேட் இலவசமாக வருகிறது. ஜூன் 26ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Note 40 5G With 108MP Camera Launched Sale From June 26 on Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X