தீபாவளிக்கு ஜெகஜோதி ஆஃபர்.. ரூ.14,249 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
தீபாவளிக்கு முந்தைய ஆஃபரில் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் மாடலான இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் பேங்க் டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், விலை குறைப்பு போக இதுவரையில் கிடைக்காத விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.19,999ஆக இருந்தது. ஆனால், அமேசான் தளத்தில் விலை குறைப்பு போக ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் கூடுதலாக ரூ.1,750 உடனடி தள்ளுபடி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.14,249 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். ரூ.15,150 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 5G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் ஐஎம்எக்ஸ் பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் கிடைக்கிறது.
எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) மற்றும் சீட்டா எக்ஸ்1 (Cheetah X1) செல்ப்-டெவலப்ட் சிப்செட் வருகிறது. இந்த சிப்செட் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 (All-Round FastCharge 2.0) ஆப்டிமைஸ் செய்ய கிடைக்கிறது. ஏனென்றால், இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது.
இதுபோக ஃபைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, இதை கன்ட்ரோல் செய்ய கூடுதலாக சீட்டா எக்ஸ்1 சிப்செட் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவில் 2K வீடியோ ரெக்கார்டிங், 3X லாஸ்லெஸ் சூப்பர்ஜூம் கிடைக்கிறது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. ஃபிளாஷ் லைட்டுக்கு பதிலாக ஆக்டிவ் ஹாலோ (Active Halo) லைட்னிங் கிடைக்கிறது. இது வாய்ஸ் ஆக்டிவேட்டட் அவுட்புட் கொடுக்கும். இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பட்டையை கிளப்பும்படி இருக்கிறது.
ஏனென்றால், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. இதுவொரு எஸ்டிபிஎஸ் (LTPS) டைப் டிஸ்பிளே மாடலாகும்.
இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போனில் IP53 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஜேபிஎஸ் (JBL) பிராண்டட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) & டூயல் மைக் (Dual Mic) உள்ளது. மேலும், இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (In display Fingerprint) மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) வருகிறது. அப்சிடியன் பிளாக் (Obsidian Black) & டைட்டன் கோல்டு (Titan Gold) கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications