Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. புதிய Infinix போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) ஸ்மார்ட்போைனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக Cheetah X1 சிப், 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 5G specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 10-பிட் பேனல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டிசிஐ-பி3 கலர் காமட் ((DCI-P3 Color Gamut) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

அதிர போகுது மார்க்கெட்.. புதிய Infinix போன் அறிமுகம்.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் (MediaTek Dimensity 7020 SoC) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் XOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த இன்பினிக்ஸ்ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

12ஜிபி ரேம் (12ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் நோட் 40 போன் வெளிவந்துள்ளது. மேலும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்,15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த போன். ஜேபிஎல் சவுண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன்.

மேலும் மேம்பட்ட Cheetah X1 சிப் மூலம் இந்த போன் இயக்கப்படுகிறது. ஹாலோ ஏஐ லைட்னிங்(Active Halo AI Lighting) எனும் புதிய தொழில்நுட்ப வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அதிர போகுது மார்க்கெட்.. புதிய Infinix போன் அறிமுகம்.. எந்த மாடல்?

5ஜி, டூயல் சிம், வைஃபை 5, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனில் உள்ளன. விண்டேஜ் கிரீன் மற்றும் டைட்டன் கோல்ட் நிறங்களில் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனை வாங்க முடியும்.

ஆனால் தற்போது இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போன் பிலிப்பைன்ஸில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் விலைPHP 13,999 (இந்திய மதிப்பில் ரூ.20,100)-ஆக உள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். அதாவது தற்போது BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 40 5G launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X