அடுத்த வாரம் உறுதி.. 108MP கேமரா.. AI Active Halo லைட்டிங்.. வருகிறது இன்பினிக்ஸ் போன்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஆக்டிவ் ஹாலோ டிசைன், 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் இந்திய அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் 21-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 5G specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் அமோலெட் டிஸ்பிளே (LTPS AMOLED display) வசதியுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2160Hz PWM dimming) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் (MediaTek Dimensity 7020 SoC) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் XOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த இன்பினிக்ஸ்ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் OIS ஆதரவு கொண்ட 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.
12ஜிபி ரேம் (12ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் நோட் 40 போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளது. பின்பு ஜேபிஎல் சவுண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன்.

ஹாலோ ஏஐ லைட்னிங் (Active Halo AI Lighting) எனும் புதிய தொழில்நுட்ப வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன்.
5ஜி, டூயல் சிம், வைஃபை 5, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனில் உள்ளன. விண்டேஜ் கிரீன் மற்றும் டைட்டன் கோல்ட் நிறங்களில் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி வெளிவரும். இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications