பிளிப்கார்ட் அனல் பறக்குது.. 5ஜி, 108MP கேம், 5000mAh பேட்டரி.. ரூ.4000 விலை குறைப்பு, இப்போ ரூ.15000 பட்ஜெட்!
33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000எம்ஏஎச் பேட்டரி, 108எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று இப்போது ரூ.15,000 பட்ஜெட்டிற்கு இறங்கி உள்ளது.
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். பிளிப்கார்ட் 2025 சுதந்திர தின விற்பனையின் ஒரு பகுதியாக இது ரூ.4000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை என்ன? இப்போது கிடைக்கும் ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

அசல் விலை என்ன, இப்போது கிடைக்கும் ஆபர் விலையே என்ன? கடந்த ஜூன் 2024 இல் அறிமுகமான இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இப்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் சுதந்திர தின 2025 விற்பனையின் கீழ் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது எந்த பேங்க் ஆபரும், கூப்பன் டிஸ்கவுட்ண்டும் இல்லாமல் நேரடியாக ரூ.4000 விலை குறைப்பை பெற்றுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் மற்றும் 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனே 6.78 அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் ஹீலியோ 7020 சிப்செட் (MediaTek Helio 7020 SoC) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக அதிகரிக்கலாம். அதே நேரத்தில் ரேம்-ஐ 8 ஜிபி வரை அதிகரிக்கலாம். இந்த மாடல் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 14 கஸ்டம் ஸ்கின் (அவுட் ஆஃப் பாக்ஸ்) மூலம் இயங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இன்பினிக்கஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது. அதில் 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களை பொறுத்தவரை, இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி53 ரேட்டிங் (IP53 rating), ஏஐ வாய்ஸ்-ஆக்டிவேட் ஹாலோ லைட்டிங் (AI voice-activated Halo Lighting), ஜேபிஎல்-ஆல் டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers tuned by JBL), டூயல் சிம் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆகியவைகளை கொண்டுள்ளது.
பிளிப்கார்ட் 2025 சுதந்திர தின விற்பனையில் வேறு என்னென்ன இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன?
1. இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) - ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.
2. இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் (Infinix Note 50s 5G Plus) - ரூ.19,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது
3. இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி பிளஸ் (Infinix Note 50x 5G Plus) - ரூ.14,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க 4. கிடைக்கிறது
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி (Infinix Smart 9 HD) ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6699 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








