இந்தியாவில் முதல் முறை.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளேவுடன் வயர்லெஸ் சார்ஜிங் Phone.. எகுறும் Infinix மாஸ்..
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில், புதிதாக இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G) என்ற மாடல்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் அறிமுகம் இன்னும் 4 தினங்களுக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் செக்மென்ட்டில் (Budget segment) இந்தியாவின் முதல் அமோலேட் (AMOLED) டிஸ்பிளே உடன் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) அம்சத்தை ஆதரிக்கும் ஸ்மார்ட்போனாக இந்த போன்கள் வெளிவரவுள்ளன. இந்த புதிய போன்கள் பற்றிய விபரங்கள் இதோ.
இன்பினிக்ஸ் நிறுவனம் வரும் ஜூன் 21, 2024 ஆம் தேதி இந்தியாவில் அதன் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் பெஸ்ட் ஸ்மார்ட்போனாக இருக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G):
காரணம், பட்ஜெட் விலையில் இந்தியாவில் முதல் முறையாக 120Hz அமோலேட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை (Wireless Charging) மக்களுக்கு வழங்கும் முதல் ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G) போன்கள் இருக்குமென்று இன்பினிக்ஸ் கூறியுள்ளது.
பிரீமியம் போன்களில் மட்டும் கிடைத்து வந்த அம்சம் இனி பட்ஜெட் பிரியர்களுக்கும் கிடைக்கப்போகிறது. சரி, இந்த புதிய ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது என்ற விபரத்தை இப்போது பார்க்கலாமா? இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 19,900 இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டதினால், இதன் அம்சங்களை நாம் அறிவோம். மறுபுறம் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G) விலை ரூ. 20,000-திற்கும் குறைவாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆகையால், நாம் இப்போது இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) போனின் சிறப்பம்ச விபரங்களை பற்றி பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி சிறப்பம்சம் (Infinix Note 40 5G Specifications):
இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி 6.78" இன்ச் அளவு கொண்ட FHD+ LTPS AMOLED டிஸ்பிளேவை (Display) கொண்டிருக்கும். இது 580 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (Peak brightness) உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் (Refresh rate) வெளிவரும். இது மீடியாடெக் டைமென்சிட்டி 7020 சிப்செட் (MediaTek Dimensity 7020 Chipset) உடன் 8GB ரேம் (RAM) மற்றும் 256GB ஸ்டோரேஜ்ஜுடன் (Storage) இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் OIS ஆதரவு கொண்ட 108MP கேமராவுடன் இரண்டு 2MP கேமரா ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 5,000mAh பேட்டரி உடன் 45W வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 20W மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஆக்டிவ் ஹாலோ லைட்டிங் டிஸைனுடன் Active Halo lighting design() தங்க நிறத்தில் வெளிவரவுள்ளது.


Click it and Unblock the Notifications