ஆர்டருக்கு மேல ஆர்டர்.. வெறும் ரூ.12,599 பட்ஜெட்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 2TB மெமரி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படி 108எம்பி கேமரா 16ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், ஃபைபாஸ் சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் நோட் 30 (Infinix Note 30) போன் வெறும் ரூ.12,599 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 30 அம்சங்கள் (Infinix Note 30 Specifications): இந்த இன்பினிக்ஸ் போனில் 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு என்ஈஜி கிளாஸ் பாதுகாப்பு (NEG Glass Protection) வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் மற்றும் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இதற்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இன்பினிக்ஸ் நோட் 30 போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதன் 8 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.
இந்த போனில் அதிர வைக்கும்படியான கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, சாம்சங் எச்எம்6 சென்சார் கொண்ட 108 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் சூப்பர் நைட் மோட், ஸ்ட்ரீட் போட்டோகிராப் பில்டர் உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த கேமராவில் டூயல் வியூ வீடியோ (Dual View Video), ஸ்டைல் மேக்கப் (Style Makeup) போன்ற மோட்கள் வருகின்றன. ஜேபிஎல் (JBL) நிறுவனத்தின் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speaker) கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு ஹை-ரெஸ் (Hi-Res) சப்போர்ட் வருகிறது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) வருகிறது.
இந்த இன்பினிக்ஸ் நோட் 30 போனில் IP53 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் கேமராவுக்கு அடுத்த பேட்டரி அம்சங்களும் பிரம்மாண்டமாக இருக்கின்றன. பைபாஸ் சார்ஜிங் (BYBASS CHARGING) மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் கேபிள் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியோடு சேர்த்து 204 கிராம் எடைக் கொண்டுள்ளது.
மேஜிக் பிளாக், இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ மற்றும் சன்செட் கோல்டு ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் 128 ஜிபி மாடலின் விலை ரூ.13,999 ஆகவும், 256 ஜிபி மாடலின் விலை ரூ.14,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இவ்வளவு அம்சங்களுக்கு இதுவே கம்மி விலையென்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மேலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனை பிளிப்கார்ட் தளத்தில் பேங்க் ஆஃப் பரோடாவின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.1,900 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.12,599க்கு வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








