Home
Mobile

மார்கெட் காலி.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 3D லெதர் பேனல்.. எந்த மாடல்?

வெறும் ரூ.24,000 பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 12ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், பைபாஸ் சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் மிகப்பெரும் விற்பனையை பதிவுசெய்த இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி (Infinix Note 30 VIP) போனின் ரேசிங் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மார்கெட்டில் மலிவான பட்ஜெட்டில் பிரீமியம் அம்சங்களை கொடுக்கும் நிறுவனங்களில் இன்பினிக்ஸ் கம்பெனியை அடித்துக் கொள்ள முடியாது. அந்த வகையில், மலிவான பட்ஜெட்டில் பிரம்மாண்ட அம்சங்களுடன் வெளியான இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றது.

பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 3D லெதர் பேனல்.. எந்த மாடல்?

இப்போது, இந்த போனின் இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி ரேசிங் எடிசன் (Infinix Note 30 VIP Racing Edition) என்னும் குளோபல் வேரியண்ட் மேலும் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் முதல்முறையாக 3டி லெதர் லைட்னிங் டெக்னாலஜி (3D Leather Lightning Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிசைனுக்காக இன்பினிக்ஸ் நிறுவனம், பிஎம்டபுள்யூ (BMW) நிறுவனத்தின் டிசைன்வொர்க்ஸ் குழுவுடன் கைக்கோர்த்துள்ளது. இந்த போனின் பேக் பேனல் லெதர் பினிஷிங் (Leather Finishing) எல்இடி லைட்னிங் கொண்டுள்ளது. இந்த புது எடிஷனில் நோட்டிபிகேஷனுக்காக மேஜிக் ரிங் (Magic Ring) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஆப்பிள் போன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் அம்சத்தை போலவே இருக்கிறது. அதோடு 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மற்ற அம்சங்கள் முன்னதாக வெளியான விஐபி மாடலில் இருப்பதை போலவே வருகிறது. அதையும், இந்த போனின் விலையையும் இப்போது தெரிந்துகொள்வோம்.

இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி அம்சங்கள் (Infinix Note 30 VIP Specification): இந்த இன்பினிக்ஸ் மாடல் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 580 பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 240Hz சாம்ப்ளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு என்இஜி கிளாஸ் பாதுகாப்பு (NEG Glass Protection)வழங்கப்பட்டுள்ளது.

இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8050 எஸ்ஓசி (MediaTek Dimensity 8050 SoC) சிப்செட் கொண்டுள்ளது. அதேபோல கேமிங் பிரியர்களை கவரும் வண்ணம் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Mali-G57 GPU) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் மாடலில் 12 ஜிபி ரேம் + 9 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது.

ஆகவே, மொத்தமாக 21 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி மெமரி வருகிறது. அதோடு 2 டிபி மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி மாடலில் 108 எம்பி (QVGA) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் செட்டப் வருகிறது.

அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 68W ஃபாஸ்ட சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாம், இந்த போனில் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போனின் டூயல் ஸ்பீக்கர்கள் ஜெபிஎல் (JBL) நிறுவனத்தின் தயாரிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் சவுண்டிங் அனுபவத்தை ஸ்பீக்கர்கள் கொடுக்கும். இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி போன், மேஜிக் பிளாக் (Magic Black) மற்றும் கிளேசியர் வைட் (Glacier White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் இந்த போனின் விலை, ரூ.24,844 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்களுக்கு இந்த விலை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இப்போது, அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி ரேசிங் எடிசனின் விலை ரூ.26,173 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 30 VIP Racing Edition With 3D Lightning Technology Launched Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X