இதை விட ஒரு நல்ல போன் கிடைக்க வாய்ப்பில்ல ராஜா? புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Infinix.!
இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி (Infinix NOTE 30 VIP) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு, தரமான சிப்செட் மற்றும் அட்டகாசமான கேமராக்கள் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சர்வதேச சந்தையில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மாரட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக தரமான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் போன் வெளிவந்துள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் கொடுக்கும் இந்த டைமன்சிட்டி 8050 6என்எம் பிராசஸர். அதேபோல் இந்த போனில் XOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக இந்த இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி ஸ்மார்ட்போனில் ஜேபிஎல் சவுண்ட் ஆதரவு, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல அட்டகாசமான ஆடியோ அம்சங்கள் உள்ளன. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 50 வாட்ஸ் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 30 விஐபி போன். மேலும் இந்த புதிய போனின் விலைUSD 299 (ரூ.24,645)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications