Home
Mobile

கப்சிப்னு வாங்குவீங்க.. ரூ.20,000 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. BYPASS சார்ஜிங்.. எந்த மாடல்?

108 எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், அமோலெட் டிஸ்பிளே, 68W சார்ஜிங், 5,000mAh பேட்டரி, ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் என்று மார்கெட்டே அதிரும்படியாக இன்பினிக்ஸ் நோட் 30 ப்ரோ (Infinix Note 30 Pro) போன் விற்பனைக்கு வரவிருக்கிறது.

இந்த போனின் மற்ற அம்சங்களை பார்த்தால், ரூ.30,000 விலையில் விற்பனையாகும் மிட்-ரேன்ஞ் போன்களில் வருவதை போல இருக்கிறது. ஆனால், இதனுடைய விலையை கேட்டால், "இவ்வளவு தானா?" என்று நீங்களே வியந்து போய்விடுவீர்கள். இந்த போனின் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் பின்வருமாறு.

ரூ.20,000 பட்ஜெட்டில் 108MP கேமரா.. 16GB ரேம்.. 2TB மெமரி.. எந்த போன்?

இன்பினிக்ஸ் நோட் 30 ப்ரோ அம்சங்கள் (Infinix Note 30 Pro Specifications): இந்த போன் 6.67 இன்ச் (2460×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+)அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 360Hz சாம்ப்ளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 900 பீக் பிரைட்னஸ் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி (MediaTek Helio G99 SoC) சிப்செட் வருகிறது. அதோடு மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 30 ப்ரோ போன் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்னும் டிரிபிள் லேயர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொண்டுள்ளது.

மொத்தமாக 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. அதோடு 2 டிபி வரைய மைக்ரோஎஸ்டி (microSD) கார்ட் சப்போர்ட் உள்ளது. 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை 25 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

அதோடு, நோட் 30 சீரிஸ் போன்களின் கொடுக்கப்படும் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) டெக்னாலஜியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பைபாஸ் சார்ஜிங் அம்சத்தை ஆன் செய்தால், போனை சார்ஜிங் செய்யும்போது பயன்படுத்தலாம். அப்போது, 30 சதவீத எலக்ட்ரிசிட்டி நேரடியாக மதர்போர்ட்டுக்கு (Motherboard) செல்லும், மீதமுள்ள 70 சதவீத எலக்ட்ரிசிட்டி பேட்டரிக்கு செல்லும்.

இதனால் பேட்டரி தொடர்பான பிரச்சனைகள் தவிர்க்கப்படும். இந்த டெக்னாலஜி கேமிங் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இந்த போனில் மற்றொரு சிறப்பம்சமாக ஜேபிஎல் (JBL) நிறுவனத்தின் ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கர்கள் கிரிஸ்டல் கிளியர் சவுண்டிங் அனுபவத்தை கொடுக்கும். மேலும், 3.5 மிமீ ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், IP53 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட், என்எஃப்சி உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த போன் வேரியபில் கோல்டு (Variable Gold) மற்றும் மேஜிக் பிளாக் (Magic Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இவ்வளவு, பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட இந்த இன்பினிக்ஸ் நோட் 30 ப்ரோ போன் ரூ.20,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த போன் கடந்த மே மாதமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், விற்பனைக்கு வரவில்லை.

ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என்று இப்போது, தகவல்கள் கசிந்துள்ளன. அந்த வகையில் அடுத்த சில வாரங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 30 Pro With 16GB RAM, 5000mAh, MediaTek Helio G99 Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X