யாரு சாமி நீ! ரூ.20,000 போதும்! 108MP கேமரா, 16GB ரேம், BYPASS சார்ஜிங்! லிஸ்ட் ரொம்ப பெருசு!
இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் பைபாஸ் சார்ஜிங், 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம் என்று பிரீமியம் போன் அம்சங்களுடன் வெளியான இன்பினிக்ஸ் நோட் 30 ப்ரோ (Infinix Note 30 Pro) போனின் லிமிடெட் எடிஷன் அறிமுகமாயிருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் நோட் 30 சீரிஸ் போன்கள் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. ஏனென்றால், இந்த போன்களில், ஜெபிஎல் ஸ்பீக்கர்கள், மாலி ஜி57 கிராபிக்ஸ் கார்டு, மீடியாடெக் சிப்செட் என்று கேமிங் பிரியர்களை அள்ளித்தூக்கும் வகையில், அம்சங்கள் இருக்கின்றன.

ஆனால், இந்த போன்களின் விலை மிட்-ரேன்ஞ் கூட கிடையாது, என்பதால் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், இன்பினிக்ஸ் நோட் 30 ப்ரோ போனின் லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரத்தில் சிறந்த போன்களை தேடிக்கொண்டிருப்பவர்கள், இந்த போனை தாராளமாக வாங்கலாம். இந்த போனின் முழு அம்சங்கள் பின்வருமாறு.
இன்பினிக்ஸ் நோட் 30 ப்ரோ 5ஜி லிமிடெட் எடிஷன் அம்சங்கள்: இந்த போன் 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் ஃப்ளக்சிபில் அமோலெட் (FLEXIBLE AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz சாம்ப்ளிங் ரேட் வருகிறது. 900 பீக் பிரைட்னஸ் வருகிறது. டூயல் நானோ சிம் கார்டு போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Mali-G57 MC2 GPU) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி (MediaTek Helio G99 SoC) சிப்செட் வருகிறது. இந்த போன் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என 16 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 2 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி கார்ட் சப்போர்ட் உள்ளது. 68W ஃபாஸ்ட சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போனை 25 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாம், பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த போனை சார்ஜிங் செய்யும்போது, பயன்படுத்தினால், 70 சதவீத எலக்ட்ரிசிட்டி பேட்டரிக்கு செல்லும், மீதமுள்ள 30 சதவீத எலக்ட்ரிசிட்டி நேரடியாக மதர்போர்ட்டுக்கு (Motherboard) சென்று, பயன்படுத்த உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் பேட்டரி தொடர்பான பிரச்சனைகளை தவித்துவிடும்.கேம் பிரியர்களுக்கு இந்த பைபாஸ் சார்ஜிங் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இந்த போனின் ஸ்பீக்கர்கள் ஜெபிஎல் (JBL) நிறுவனத்தின் தயாரிப்பாகும். அதனால் கிரிஸ்டல் கிளியர் சவுண்டிங் அனுபம் கிடைக்கும். இந்த போன் மேஜிக் பிளாக் (Magic Black), வேரியபில் கோல்டு (Variable Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை குறித்த தகவல் வெளியாகவில்லை.
இருப்பினும், இன்பினிக்ஸ் நோட் 30 ப்ரோ 5ஜி போனின் விலை, ரூ.20 ஆயிரம் விலைக்குள் இருப்பதால், இந்த போனும் அதே விலையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications