Home
Mobile

பொளக்குது ஆர்டர்.. ரூ.12,999 பட்ஜெட்ல BYBASS சார்ஜிங்.. 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

டூயல் சேனல் ஃபாஸ்ட் சார்ஜிங், 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, டைமன்சிட்டி எஸ்ஓசி போன்ற பக்கா பீச்சர்களை கொண்ட இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G) போனின் விற்பனையானது, தள்ளுபடியில் பின்னியெடுக்கிறது.

இந்த போனின் பேட்டரி மற்றும் ஸ்பீக்கர் சிஸ்டம் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது. ஏனென்றால், பட்ஜெட்டில் முதல் முறையாக பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) டெக்னாலஜியுடன் இந்த போன் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொளக்குது ஆர்டர்..  ரூ.12,999 பட்ஜெட்ல BYBASS சார்ஜிங்.. 108MP கேமரா!

பேட்டரி மட்டுமல்லாமல், கேமரா மற்றும் சிப்செட்டிலும் பட்ஜெட்டுக்கும் கூடுதலாக பர்பஃமென்ஸ் கொண்டிருக்கிறது. இந்த போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் உடன் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவொரு மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட 5ஜி சிப்டெட் மாடலாகும். ஆகவே, கேமிங் மட்டுமல்லாமல், லாக்-ப்ரீ ஆப்ரேட்டிங் கிடைக்கும். அதேபோல ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட எக்ஸ்ஓஸ் 13 (XOS 13) வருகிறது. 108 எம்பி மெயின் கேமராவானது, சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கொண்டிருக்கிறது.

இந்த 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதோடு 2 எம்பி டெப்த் சென்சார் + AI கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, கேமராவிலும் நல்ல சென்சார் வருவதால், அவுட்புட் பக்காவாக எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல், பேர்ட்ராய்டு (Portrait), சூப்பர் நைட் (Super Night), டூயல் வீடியோ (Dual Video) போன்ற பீச்சர்கள் இருக்கின்றன.

16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த மாடலின் டிஸ்பிளேவை பார்க்கையில், 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) பேனல் வருகிறது. என்ஈஜி கிளாஸ் (NEG Glass) புரொடெக்சன் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. பைபாஸ் சார்ஜிங் (BYBASS Charging) மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது.

ஆகவே, டூயல் சேனல் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி (Dual-channel Fast Charging Technology) வருகிறது. இதன் மூலம் பேட்டரி மட்டுமல்லாமல், மதர் போர்டுக்கும் நேரடியாக சார்ஜிங் செய்து கொள்ளலாம். ஆகவே, பேட்டரி தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கலாம். IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளது.

மேஜிக் பிளாக் (Magic Black), இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue) மற்றும் சன்செட் கோல்டு (Sunset Gold) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,499ஆக இருக்கிறது. பிளிப்கார்ட்டில் ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999க்கு இந்த போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 30 5G With 108MP Camera Sale With 19 Percent Discount on Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X