இந்திய மார்க்கெட்டே அதிரும் போன்! ரூ.15,000 விலையில் ரூ.35,000 மதிப்பிலான அம்சங்கள்! எந்த போன்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டே அதிரும்படி மலிவான விலையில், 16ஜிபி ரேம், பைபாஸ் சார்ஜிங், மாலி ஜி57 கிராபிக்ஸ் கார்டு, 108எம்பி கேமரா என்று ஃபிளாக்ஷிப் அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G) போன் விற்பனைக்கு வருகிறது.
ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமான விலை கொண்ட போன்களின் மட்டுமே கிடைக்கும், பெரும்பாலான அம்சங்கள், ரூ.15,000 பட்ஜெட் போனில் முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனுக்கான வரவேற்பு, மக்களிடையே மிகப்பெரும் அளவில் இருக்கிறது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை, ஆஃபர் குறித்த விவரங்கள் பின்வருமாறு.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Note 30 5G Specification): இந்த போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் வருகிறது. 580 பீக் பிரைட்னஸ் வருகிறது. டூயல் நானோ சிம் கார்டு போர்ட் உள்ளது. 15 5ஜி பேண்ட் சப்போர்ட் இருக்கிறது.
ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களை கவரும் வகையில், மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன், 108எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (Ultrawide Lens) + 2எம்பி மேக்ரோ லென்ஸ் (Macro Lens) கொண்டுள்ளது.
16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என மொத்தமாக 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 45W ஃபாஸ்ட சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனை 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இந்த இன்பினிக்ஸ் போனில் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போனை சார்ஜிங் செய்யும்போது, பயன்படுத்தினால், 70 சதவிகித எலக்ட்ரிசிட்டி பேட்டரிக்கும், மீதமுள்ள 30 சதவிகித எலக்ட்ரிசிட்டி நேரடியாக மதர்போர்ட்டுக்கும் (Motherboard) செல்லும். இதன்மூலம் பேட்டரி தொடர்பான பிரச்சனைகளுக்கு இடமிருக்காது. குறிப்பாக, சார்ஜிங் செய்யும் போது போன் ஹீட்டாவது, எளிதாக தவிர்க்கப்பட்டுவிடும்.
கேம் பிரியர்களுக்கு, இந்த தொழில்நுட்பம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஆனால், சார்ஜிங் செய்துகொண்டே கேம் விளையாடுவதை, தவிர்ப்பது நல்லது. இந்த போனின் ஸ்பீக்கர்கள் ஜெபிஎல் (JBL) நிறுவனத்தின் தயாரிப்பாகும். ஆகவே, கிரிஸ்டல் கிளியர் சவுண்டிங் அனுபவத்தை அது கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன், மேஜிக் பிளாக் (Magic Black), இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue), சன்செட் கோல்டு (Sunset Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இன்று (ஜூன் 22) பிற்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு, அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை, மலிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மார்க்கெட்டை பிடிக்க, இந்த விலையில் போனை களமிறக்கியிருக்கிறது, இன்பினிக்ஸ் நிறுவனம். ரூ.15,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. அதோடு ஆக்ஸிஸ் பேங் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் ரூ.14,999 கொடுத்து போனை வாங்கிக்கொள்ள முடியும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications