Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.15,000 போதும்! 16GB ரேம், 108MP கேமரா, BYBASS சார்ஜிங்! எந்த மாடல்?

இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.15,000 பட்ஜெட் விலையில் பைபாஸ் சார்ஜிங், 108 எம்பி கேமரா என்று எந்த ஸ்மார்ட்போன் நிறுவனமும் கொடுக்கவே யோசிக்கும் அம்சங்களுடன் இன்பினிக்ஸ் (Infinix) நோட் 30 5ஜி போன் (Note 30 5G) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த இன்பினிக்ஸ் போனானது, ஜெபிஎல் நிறுவனத்தின் ஸ்பீக்கர்கள், மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு, 5000mAh பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் என்று மற்ற அம்சங்களிலும் பின்னிப்பெடல் எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போனின் முழு அம்சங்கள், அறிமுக தேதி உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ரூ.15,000 போதும்! 16GB ரேம், 108MP கேமரா, BYBASS சார்ஜிங்! எந்த போன்?

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள்: இந்த போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz சாம்ப்ளிங் ரேட் வருகிறது. 580 பீக் பிரைட்னஸ் வருகிறது. டூயல் நானோ சிம் கார்டு போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Mali-G57 GPU) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் வருகிறது.

இந்த போன் 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என 16 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 45W ஃபாஸ்ட சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போனை 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும். அதுமட்டுமல்லாம், பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போனை சார்ஜிங் செய்யும்போது, நீங்கள் பயன்படுத்தினால், 70 சதவீத எலக்ட்ரிசிட்டி மட்டுமே பேட்டரிக்கு செல்லும், மீதமுள்ள 30 சதவீத எலக்ட்ரிசிட்டி நேரடியாக மதர்போர்ட்டுக்கு (Motherboard) சென்றுவிடும். இதனால் பேட்டரி தொடர்பான பிரச்சனைகளே இருக்காது. அதேபோல சார்ஜிங் போது போன் ஹீட்டாவது தவிர்க்கப்படும். கேம் பிரியர்களுக்கு இந்த பைபாஸ் சார்ஜிங் மிகப் பொருத்தமாக இருக்கும்.

இந்த போனின் ஸ்பீக்கர்கள் ஜெபிஎல் (JBL) நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், கிரிஸ்டல் கிளியர் சவுண்டிங் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போன் இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue), மேஜிக் பிளாக் (Magic Black), சன்செட் கோல்டு (Sunset Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் ஜூன் 14ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை, மிட்-ரேன்ஞ் கூட கிடையாது என்பதே உண்மை.

ஆம், வெறும் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. இதனால், விற்பனை சக்கைப்போடு போடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix Note 30 5G Price Confirmed in India With Bypass Charging Solution, 108MP Camera Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X