Home
Mobile

அலறும் மார்க்கெட்! ரூ.15,999 விலையில் BYPASS சார்ஜிங், 16GB ரேம், 108MP கேமரா, JBL ஸ்பீக்கர்.. எந்த போன்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட் சரித்திரத்திலேயே முதல் முறையாக ரூ.15,999 விலையில், மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு, டைமன்சிட்டி 6080 சிப்செட், 108 எம்பி கேமரா, பைபாஸ் சார்ஜிங் என்று பல்வேறு அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G) போனின் மற்ற அம்சங்களும் தரமாக கொடுக்கப்பட்டுள்ளது. மிட்-ரேன்ஞ் விலையில் சிறந்த கேமிங் போன், வாங்க திட்டமிட்டு வரும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு, இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி சிறந்த சாய்ஸாக இருக்கும். இந்த போனின் முழு அம்சங்கள் பின்வருமாறு.

ரூ.15,999 பட்ஜெட்டில் BYPASS சார்ஜிங், 108MP கேமரா! எந்த போன்?

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Note 30 Specification)

இந்த இன்பினிக்ஸ் போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz சாம்ப்ளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 580 பீக் பிரைட்னஸ் வருகிறது. டூயல் நானோ சிம் கார்டு போர்ட் உள்ளது. கேமிங் பிரியர்களை கவரும் வண்ணம், ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Mali-G57 GPU) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் வருகிறது.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன், 108 எம்பி (QVGA) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என்று மொத்தமாக 16 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 45W ஃபாஸ்ட சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனை 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாம், முக்கிய அம்சமாக இந்த போனில் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த போனை சார்ஜிங் செய்துகொண்டே பயன்படுத்தினால், 70 சதவீத எலக்ட்ரிசிட்டி மட்டுமே பேட்டரிக்கு செல்லும், மீதமுள்ள 30 சதவீத எலக்ட்ரிசிட்டி நேரடியாக மதர்போர்ட்டுக்கு (Motherboard) சென்று போன் வேலை செய்ய உதவும்.

இந்த தொழில்நுட்பத்தால் பேட்டரி தொடர்பான பிரச்சனைகளுக்கு இடமிருக்காது. அதேபோல சார்ஜிங் செய்யும் போது போன் ஹீட்டாவது, முற்றிலும் தவிர்க்கப்படும். இதனால், கேம் பிரியர்களுக்கு, இந்த போன் அட்டகாசமான சாய்ஸ் என்பதில் சந்தேகமில்லை. இந்த போனின் ஸ்பீக்கர்கள் ஜெபிஎல் (JBL) நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், கிரிஸ்டல் கிளியர் சவுண்டிங் அனுபவத்தை யூசர்கள் பெற முடியும்.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன், இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue), மேஜிக் பிளாக் (Magic Black), சன்செட் கோல்டு (Sunset Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இன்று (ஜூன் 14) பிற்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இவ்வளவு, அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை, மிட்-ரேன்ஞ் கூட கிடையாது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், இந்த போன் வெறும் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது, ரூ.15,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix Note 30 5G Launched in India Here is Specification And Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X