Home
Mobile

அறக்க பறக்கும் ஆஃபர்.. 108எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. கம்மி விலையில் இன்பினிக்ஸ் போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் flipkart dhamaka sale 2023 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த தீபவாளிக்கு கம்மி விலையில் போன்களை வாங்கும் நினைக்கும் பயனர்கள் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்துவது நல்லது.

அதேபோல் பிளிப்கார்ட தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இப்போது ரூ.13,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. இப்போது இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

108எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. கம்மி விலையில் இன்பினிக்ஸ் போன்..

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G) ஸ்மார்ட்போன் ஆனது 6.78 இன்ச் புல்எச்டி பிளஸ் எல்சிடி (LCD)டிஸ்பிளே கொண்டுள்ளது. பின்பு 2460 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 7nm) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

108 எம்பி (QVGA) மெயின் கேமரா +2 எம்பி டெப்த் சென்சார் லென்ஸ் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி (MicroSD) கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

108எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. கம்மி விலையில் இன்பினிக்ஸ் போன்..

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue), மேஜிக் பிளாக் (Magic Black), சன்செட் கோல்டு (Sunset Gold) நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த போன்.

அதேபோல் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போனில் அனைத்து சிறப்பு அம்சங்களும் இருக்கிறது. எனவே இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Note 30 5G is available at 22 percent discount on Flipkart: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X