Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.12,824 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட் அதிரும்படியான விலையில் 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் விற்பனைக்கு வந்த இன்பினிக்ஸ் நோட் 30 (Infinix Note 30) போன் பிளிப்கார்ட் தள்ளுபடியில் மேலும் மலிவான விலைக்கு கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 30 அம்சங்கள் (Infinix Note 30 Specification): இந்த இன்பினிக்ஸ் மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் சிப்செட் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) மற்றும் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) சப்போர்ட் வருகிறது.

வெறும் ரூ.12,824 போதும்.. 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த இன்பினிக்ஸ் நோட் 30 போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட்டும் வருகிறது. இதுபோக 2 டிபிக்கான மைக்ரோ (microSD) சப்போர்ட கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட் வருகிறது. அதோடு 580 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் என்ஈஜி கிளாஸ் பாதுகாப்பு (NEG Glass Protection) கொண்டிருக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் பட்டையை கிளப்பும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. அந்த வகையில், 108 எம்பி மெயின் கேமரா சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் வருகிறது. அதேபோல 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஏஐ சப்போர்ட் கொண்ட கேமராவாகும். அதோடு எல்இடி பிளாஷ் மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

வெறும் ரூ.12,824 போதும்.. 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த கேமராவை போலவே மிரட்டலான பேட்டரி சிஸ்டம் இடம் பெற்றுள்ளது. ஆகவே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைபாஸ் சார்ஜிங் டெக்னாலஜி அதிகப்படியான எலக்ட்ரிசிட்டியை நேரடியாக மதர் போர்டுக்கு அனுப்புவதால் சார்ஜிங் செய்யும்போது பேட்டரி பிரச்சனை தவிர்க்கப்படுகிறது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 30 போனில் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகின்றன. இதுவொரு ஜேபிஎல் (JBL) டெக்னாலஜியாகும். அதோடு 3.5 மிமீ ஆடியோ ஜாக் வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாடலில் மேஜிக் பிளாக் (Magic Black), இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue) மற்றும் சன்செட் கோல்டு (Sunset Gold ) ஆகிய மூன்று கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் ரூ.14,999ஆக விலை குறைக்கப்பட்டது.

வெறும் ரூ.12,824 போதும்.. 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இப்போது, இந்த விலையிலும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அசத்தலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,675 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, 108 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனை வெறும் ரூ.12,824க்கு வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Infinix Note 30 16GB RAM, 108MP Camera Sale Under Rs 15000 in Flipkart Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X