பட்ஜெட் விலையில் பக்காவான ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் Infinix: அறிமுக தேதி இதுதான்.!
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் சியோமி, விவோ, மோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து அசத்தலான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இன்பினிக்ஸ் நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 12ஐ (2022)
இந்நிலையில் இன்பினிக்ஸ் நோட் 12ஐ (2022) எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதாவது வரும் ஜனவரி 25-ம் தேதி இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் நோட் 12ஐ (2022) ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். அதாவது இந்த போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.
இந்த இன்பினிக்ஸ் நோட் 12ஐ (2022) ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸமார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
விரைவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் நோட் 12ஐ (2022) ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12ஐ (2022) ஸ்மார்ட்போன்.

இன்பினிக்ஸ் நோட் 12ஐ (2022) ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் உடன் Mali G52 GPU ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் XOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 12ஐ (2022) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
பாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய இன்பினிக்ஸ் நோட் 12ஐ (2022) ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

யுஎஸ்பி டைப்-சி போரட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12ஐ (2022) ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் கருப்பு மற்றும் நீல நிறங்களில் அறிமுகமாகும். பின்பு இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








