பட்ஜெட் கிங் Infinix.. கூலிங் சிஸ்டம் உடன் அறிமுகமான Note 12i 2022!

|

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அதன் நோட் தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. அது Infinix Note 12i 2022 ஆகும். பட்ஜெட் விலைப்பிரிவு ஸ்மார்ட்போனுக்கு மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான இன்ஃபினிக்ஸ் தற்போது மற்றொரு தரமான சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

காட்சிப் பிரிவில் பெரிய முன்னேற்றம்..

காட்சிப் பிரிவில் பெரிய முன்னேற்றம்..

Infinix நிறுவனம் Infinix Note 12i 2022 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வந்த Infinix Note 12i இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும்.

Infinix Note 12i ஸ்மார்ட்போனில் எல்சிடி பேனல் பொருத்தப்பட்டிருந்த நிலைியல் இந்த 2022 பதிப்பில் AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கிறது.

இதன்மூலம் காட்சிப் பிரிவில் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வித்தியாசமான கேமரா தொகுதி..

வித்தியாசமான கேமரா தொகுதி..

Infinix Note 12i 2022 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் பெசல்களுக்கான விகித அளவு முந்தைய மாடலை விட மிகவும் குறைவானதாக இருக்கிறது.

பின்புற வடிவமைப்பு இரண்டு மாடல்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது.கேமரா பிரிவிலும் சில மாற்றங்கள் இருக்கிறது.

கேமரா தொகுதி வடிவமைப்பானது அதன் முந்தைய மாடலை விட சிறியதாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது.

சிறந்த சிப்செட் செயல்திறன்..

சிறந்த சிப்செட் செயல்திறன்..

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது மிகவும் சிறந்ததாக இருக்கிறது. இதில் முழு HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் 92 சதவீத டிஸ்ப்ளே டூ உடல் விகிதம் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றிருக்கும் சிப்செட்டில் இருந்து இது வேறுபட்டிருக்கிறது. இந்த சிப்செட் மிகவும் செயல்திறன் ஆதரவைக் கொண்டுள்ளது.

கூலிங் சிஸ்டம் ஆதரவு..

கூலிங் சிஸ்டம் ஆதரவு..

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வெப்படைதல் தடுக்கும் கருவியும் உள்ளது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சம் என்பது அரிது.

இந்த ஸ்மார்ட்போனில் வெப்பமடைவதை தடுக்கும் வகையிலான 3D 6-அடுக்கு கிராபெனின் குளிரூட்டும் முறை இடம்பெற்றிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இடம்பெற்றுள்ளது.

இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியும் இருக்கிறது. இதன்மூலம் 2டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

50 எம்பி பிரதான கேமரா

50 எம்பி பிரதான கேமரா

Infinix Note 12i 2022 இன் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இதில் 50 எம்பி பிரைமரி ஸ்னாப்பர், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஏஐ சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி ஆதரவுக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

Infinix Note 12i 2022 ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்னவென்றால், பாதுகாப்பு அம்சத்துக்கு என இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது.

4G VoLTE, DTS ஆடியோவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், FM ரேடியோ மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளது.

5000mAh பேட்டரி ஆதரவு..

5000mAh பேட்டரி ஆதரவு..

இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. Infinix Note 12i 2022 ஆனது ஆண்ட்ராய்ட் 12 அடிப்படையிலான XOS 10.6 மூலம் இயக்கப்படுகிறது.

Infinix Note 12i 2022 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Infinix Note 12i 2022 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Infinix Note 12i 2022 ஸ்மார்ட்போனானது தற்போது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் இந்தோனேசியா விலை 2,299,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதன் இந்திய விலை மதிப்பு ரூ.12,500 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனானது Force Black, Alpine White மற்றும் Metaverse Blue ஆகிய வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது.

இந்திய அறிமுகம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Infinix Note 12i 2022 Smartphone Launched with 5000mAh Battery, Cooling System

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X