Home
Mobile

மஜாவான டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.10,999 போதும்.. 13GB ரேம்.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) 50 கேமரா, 33W சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற மிட்-பிரீமியம் அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ (Infinix Note 12 Turbo) போனுக்கு அசத்தலான தள்ளுபடி கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ அம்சங்கள் (Infinix Note 12 Turbo Specifications): இந்த இன்பினிக்ஸ் நோட் மாடலில் 6.7 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.10,999 போதும்.. 13GB ரேம்.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி!

அதோடு 108% டிஎஸ்சி ரேசியோ (TSC Ratio) மற்றும் 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) சப்போர்ட் வருகிறது. இந்த இன்பினிக்ஸ் போனில் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) மற்றும் எக்ஸ்ஓஸ் 10.6 (XOS 10.6) வருகிறது.

அதோடு ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 12என்எம் (Octa Core MediaTek Helio G96 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. 512 ஜிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இன்பினிக்ஸ் டர்போ மாடலில் குவாட் எல்இடி பிளாஷ் (quad LED flash) லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஏஐ (AI) லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted fingerprint Scanner), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers) கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) வருகிறது. இந்த போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு டைப் - சி (Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த போன் பேட்டரியோடு சேர்த்து, வெறும் 184.5 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த போனில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5 (Bluetooth 5) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ சஃபையர் ப்ளூ (Sapphire Blue), ஃபோர்ஸ் பிளாக் (Force Black) மற்றும் ஸ்னோஃபால் (Snowfall) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்பு ரூ.12,999ஆக விலை குறைக்கப்பட்டது.

இப்போது, இந்த விலையிலும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.2000 உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.10,999க்கு வாங்கிக் கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 12 Turbo Under Rs 12000 With Offer On Flipkart Big Billion Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X