108MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வந்தாச்சு புது Infinix Note 12 Pro.! எப்போது வாங்கலாம்?

|

Infinix மொபைல்ஸ் என்பது ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனமாகும். 2013 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் மெல்ல மெல்ல முன்னேறி, இப்போது நாட்டின் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிராண்டாக உருமாறியுள்ளது. உண்மையில், குறைந்த விலையில் சிறந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்து, மக்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை இன்பினிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் இன்று ஒரு புதிய Infinix Note 12 Pro ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Infinix Note 12 Pro பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமா?

Infinix Note 12 Pro பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமா?

Infinix நிறுவனம் இன்று இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ (Infinix Note 12 Pro) என்ற புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனத்தின் Infinix Note 12 வரிசையில் 5வது புதிய சாதனமாக இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நிறுவனம், நோட் 12 , நோட் 12 டர்போ , நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 12 5ஜி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அறிமுகமான Infinix Note 12 5G இல் என்ன ஸ்பெஷல்?

சமீபத்தில் அறிமுகமான Infinix Note 12 5G இல் என்ன ஸ்பெஷல்?

சமீபத்தில் இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய Infinix Note 12 5G மாடலை சக்தி வாய்ந்த டைமென்சிட்டி 810 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த சாதனம் AMOLED டிஸ்பிளே உடன், 108MP கொண்ட பிரைமரி கேமரா மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் பட்ஜெட் விலை மாடலாக 5ஜி உடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இது ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

'இந்த' சிப்செட் உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இது தானா?

'இந்த' சிப்செட் உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இது தானா?

இந்த மாடலை தொடர்ந்து, நிறுவனம் இப்போது புதிதாக Infinix Note 12 Pro என்ற ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. இது Mediatek இன் புதிய பட்ஜெட் சிப்செட் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் MediaTek Helio G99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதிலும் நிறுவனம் 108 மெகாபிக்சல் கேமராவை வழங்கியுள்ளது. சரி, இந்த போனின் விலை மற்றும் விற்பனை விபரங்களைப் பற்றி பார்க்கலாம்.

Infinix Note 12 Pro விலை மற்றும் விற்பனை தகவல்

Infinix Note 12 Pro விலை மற்றும் விற்பனை தகவல்

Infinix Note 12 Pro ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளிவந்துள்ளது. இந்த மாடல் ரூ. 16,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் இந்தியாவில் செப்டம்பர் 1 முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்குக் கிடைக்கும். இது வைட், ப்ளூ மற்றும் க்ரெய் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். முதல் அறிமுக விற்பனையின் போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பர்ச்சேஸ் மீது ரூ. 1,500 தள்ளுபடி கிடைக்கிறது. பிளிப்கார்ட் சூப்பர் காயின்களுடன் ரூ.500 தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

Infinix Note 12 Pro போனில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது?

Infinix Note 12 Pro போனில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது?

Infinix Note 12 Pro 4G ஆனது MediaTek Helio G99 சிப்செட் உடன் வருகிறது. இது தான் இந்த போனின் முதல் ஸ்பெஷாலிட்டி ஆகும். இந்த Helio G99 சிப்செட், 6nm உடன் அதிகபட்ச 2.2GHz கிளாக் வேகத்தைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வீதத்துடன் கூடிய 6.7' இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. நாம் முன்பே பார்த்தது போல, இந்த நோட் 12 ப்ரோ சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

பட்ஜெட் விலை போனில் உண்மையாவே 108MP கேமராவா?

பட்ஜெட் விலை போனில் உண்மையாவே 108MP கேமராவா?

கேமராவைப் பொறுத்தவரை, இது 108MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் AI லென்ஸுடன் வருகிறது. முன்பக்கத்தில், 16MP செல்ஃபி ஸ்னாப்பருடன் வருகிறது. இந்த டிவைஸ் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 5,000mAh பேட்டரி உடன் பேக் செய்யப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 உடன் XOS 10.6 ஸ்கின் மூலம் இயங்குகிறது. இது 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் போன்ற இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

இப்படி ஒரு வித்தியாசமான கீபோர்ட் டிவைஸா? அல்ட்ரா காம்பெக்ட் சைசில் தி ஷ்ரிம்ப் Keyboard அறிமுகம்.!இப்படி ஒரு வித்தியாசமான கீபோர்ட் டிவைஸா? அல்ட்ரா காம்பெக்ட் சைசில் தி ஷ்ரிம்ப் Keyboard அறிமுகம்.!

யாராவது Infinix Note 12 Pro போனை வேண்டாம் என்று சொல்வார்களா?

யாராவது Infinix Note 12 Pro போனை வேண்டாம் என்று சொல்வார்களா?

பட்ஜெட் விலையில் பெஸ்டான சிப்செட் மற்றும் சிறந்த கேமரா அம்சத்தை எதிர்பார்க்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த Infinix Note 12 Pro ஸ்மார்ட்போன் மாடல் உங்களுக்கானது தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரூ. 16,999 விலையில் 108 மெகா பிக்சல் கேமரா கிடைக்கிறது என்றால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? நிச்சயம் மாட்டார்கள் தானே. சரி, இந்த போனை வாங்க விரும்பினால் செப்டம்பர் 1ம் தேதி நடக்கும் விற்பனையைத் தவறவிடாதீர்கள்.

Best Mobiles in India

English summary
Infinix Note 12 Pro Launched With First MediaTek Helio G99 SoC At Budget Price In India Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X