Home
Mobile

108MP கேமரா களமிறங்கும் Infinix நோட் 12 ப்ரோ 4ஜி.! எப்போது அறிமுகம் தெரியுமா?

மிகவும் அதிகம் எதிர்பார்த்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன விலை?

என்ன விலை?

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் ரூ.12,000 அல்லது ரூ.13,000-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

புதிய இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 20:9 ரேஷியோ போன்ற பல அசத்தலான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்வெளிவரும்.

  8ஜிபி ரேம் வசதி

8ஜிபி ரேம் வசதி

அதேபோல் இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவும் உள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.

எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக்  சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் மீடியாடெக் ஜி99 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தடையற்ற கேமிங் அனுபவத்தைவழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

 சூப்பர் கனெக்டிவிட்டி

சூப்பர் கனெக்டிவிட்டி

4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, என்எப்சி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், USB-C போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix Note 12 Pro 4G phone to launch in India on August 26: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X