Home
Mobile

வாங்குனா இந்த Infinix Note 12 5G போன் வாங்கனும்: அப்படி என்னங்க இதுல ஸ்பெஷல்?

இப்போது தரமான சிப்செட் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க நினைத்தால் 30,000 ரூபாய் கண்டிப்பாக தேவைப்படும். ஆனாலும் ஒரு சில நிறவனங்கள் பட்ஜெட் விலையில் அதே தரமான சிப்செட் உடன் கூடிய அருமையான போன்களை அறிமுகம் செய்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி

அந்த பட்ஜெட் வரிசையில் இன்பினிக்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. அதாவது இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் புதிய இன்பினிக்ஸ்நோட் 12 5ஜி (Infinix Note 12 5G) ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது. முன்பு கூறியது போல் தரமான சிப்செட் உடன் வெளிவந்துள்ளது இந்த புதியஸ்மார்ட்போன்.

என்ன விலை?

என்ன விலை?

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்ட இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்னோஃபால் ஒயிட் மற்றும் ஃபோர்ஸ் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஆனது விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி AMOLED வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ரேஷியோ போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன்.

இதுதவிர கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். இது டிஸ்பிளேவுக்கு சிறந்த பாதுகாப்பு கொடுக்க்கிறது. அதேபோல் இதன் டிஸ்பிளேவை விட சிப்செட் மிக அருமையாக இருக்கும்.

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் சில பிளாக்ஷிப் போன்களில் கூட இருக்கிறது. அதாவது கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற வசதிகளுக்கும் மிக அருமையாக பயன்படும் இந்த இந்த சிப்செட்.

மேலும் XOS 10.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இதை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

சூப்பரான கேமரா

சூப்பரான கேமரா

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் 100எம்பி ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போன் 50எம்பி கேமராவுடன் மட்டுமே வெளிவந்துள்ளது.

அதாவது இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா சென்சார் + 2எம்பி டெப்த் லென்ஸ் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இதன் கேமராக்கள் உதவியுடன் துல்லியமான படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

அதேபோல் இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் 180W பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 33W பாஸ்ட் சார்ஜிங் உடன் மட்டுமே வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் போன்.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை
இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

மேலும் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒருஎஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது.

நம்பி வாங்கலாம்

நம்பி வாங்கலாம்

இந்த போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. பின்பு 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி அருமையான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. எனவே இதை நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Infinix Note 12 5G with Dimensity 810 SoC Launched in India : Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X