Home
Mobile

108எம்பி மெயின் கேமரா: மாஸ் காட்டும் Infinix நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம்?

இன்பினிக்ஸ் நிறுவனம் நிறுவனம் விரைவில் புதிய இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி (Infinix Note 12 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, இந்த மாதம் இறுதியில் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி

குறிப்பாக இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்க் ப்ளூ, பிளாக் போன்ற நிறங்களில் இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்பிளே எப்படி?

டிஸ்பிளே எப்படி?

புதிய இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும். அதாவது இந்த டிவைஸ் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும்.

மேலும் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி மாடல்.

குறிப்பாக இதன் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதேபோல் டிஸ்பிளேவை விட கேமரா அமைப்பு சூப்பராக உள்ளது.

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் போன்.

எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லிமாய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

 மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக மீடியாடெக் சிப்செட் தான் அதிகம் இடம்பெறுகிறது. அதாவது இந்த சிப்செட் கேமிங், எடிட்டிங் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக உதவும் என்றே கூறலாம்.

அதேபோல் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 5G சிப்செட் உள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதியஇன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்வெளிவரும்.

 சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.

பின்பு இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 180W பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக ஒரு தகவல்.இந்த பாஸ்ட் சார்ஜிங் வசதி இருந்தால் போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி

குறிப்பாக இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை

அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் 5.0, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி-சி போர்ட், ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவரும். மேலும் இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Note 12 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X