செஞ்சுட்டீங்க.! Infinix Note 12 2023 போன்ல எல்லாமே சூப்பர்.! ஆனா 1 குறை இருக்கு.!

|

உலக ஸ்மார்ட்போன் சந்தையில், எப்போதும் இல்லாத வகையில், முன்பைவிட இப்போது தான் போட்டிகள் கடுமையாகி வருகிறது.

ஆம், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் ஏகபோக போட்டி நடைபெறுவதனால், நிறுவனங்கள் புது-புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வகையில் இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் இப்போது Infinix Note 12 2023 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 12 2023 அறிமுகம்.!

இன்பினிக்ஸ் நோட் 12 2023 அறிமுகம்.!

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான இன்ஃபினிக்ஸ் மொபைல்ஸ் புதிய Note சீரிஸ் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 12 2023 (Infinix Note 12 2023) என்ற மாடலை நிறுவனம் சைலெண்டாக வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் செக்மென்ட்டில் (Budget Segment) வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

பல சிறப்பான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஒரே ஒரு குறைபாடு இருக்கிறது. அது என்ன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

Infinix Note 12 (2023) போனை ஏன் நிறுவனம் இப்போதே ரிவீல் செய்தது?

Infinix Note 12 (2023) போனை ஏன் நிறுவனம் இப்போதே ரிவீல் செய்தது?

Infinix Note 12 (2023) ஸ்மார்ட்போன் மாடலில் 2023 என்ற எண் அடுத்த வருடத்தைக் குறிக்கிறது என்றாலும், இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் இப்போதே ரிவீல் செய்துவிட்டது.

இந்திய ஸ்மார்ட்போன் சதையில் ஏற்கனவே இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Note 12 5G மற்றும் Infinix Note 12 Pro 5G மாடல்களை அறிமுகம் செய்துள்ளதால், இந்த புதிய Infinix Note 12 2023 மாடல், இந்த இரண்டு மாடலுக்கு கீழே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!

Infinix Note 12 2023 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Infinix Note 12 2023 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Infinix Note 12 2023 ஸ்மார்ட்போனின் விலை பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்த புதிய ஸ்மார்ட்போனின் முழுமையான சிறப்பம்ச விபரங்களை முதலில் பார்த்துவிடலாம்.

Infinix Note 12 2023 ஸ்மார்ட்போன் முழு HD+ உடன் கூடிய 6.7' இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் 60Hz ரெப்ரெஷ் ரேட் உடன் முன்பக்கத்தில் கேமராவிற்காக ஒரு சிறிய நாட்ச் கட்அவுட்டைக் கொண்டுள்ளது.

இந்த போனின் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும்.

தரமான கேமரா.. சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்.!

தரமான கேமரா.. சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்.!

இந்த ஸ்மார்ட்போன் 5ஜிபி வரை எக்ஸ்பண்டபிள் ரேம் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 50MP பிரைமரி சென்சார் உடன் AI லென்ஸுடன் கூட 2MP செகண்டரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இந்த போனின் முன்பக்கத்தில் 16MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!

இந்த போனில் என்ன குறைபாடு இருக்கிறது?

இந்த போனில் என்ன குறைபாடு இருக்கிறது?

Infinix Note 12 2023 ஸ்மார்ட்போன் புதிய 6nm MediaTek Helio G99 சிப்செட் உடன் வருகிறது. ஆம், நீங்கள் யூகித்தது சரி தான், இந்த போன் 4G சேவையில் இயங்கும் மாடலாகும்.

இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலும் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா இப்போது 5ஜி போன்களுக்கான முக்கிய வியாபார சந்தையாக மாறிவிட்ட பிறகு, இன்பினிக்ஸ் 4ஜி போனை அறிமுகம் செய்வது எந்த விதத்தில் வரவேற்கப்படும் என்பது நமக்கு தெளிவாகத் தெரியவில்லை.

Infinix Note 12 2023 போனின் விலை என்ன?

Infinix Note 12 2023 போனின் விலை என்ன?

Infinix Note 12 2023 ஸ்மார்ட்போன் சாதனம் 8 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் $199 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ.16,400 என்ற விலையை நெருங்குகிறது.

இந்த போன் ப்ளூ, க்ரேய் மற்றும் வைட் ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான இந்திய வெளியீட்டு விவரங்களை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Best Mobiles in India

English summary
Infinix Note 12 2023 Launched With MediaTek Helio G99 SoC Know Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X