டிசம்பர் 13: இந்தியாவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் நோட் 11எஸ் ஸ்மார்ட்போன்.!
இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 11எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் டிசம்பர் 13-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 11எஸ்
இன்பினிக்ஸ் நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.95-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,460 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கைநுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல். மேலும் கடந்த மாதம் இந்நிறுவனம் அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ
இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.95-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,460பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போன் மாடல். இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக்ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் XOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்டுத்த
ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும்கேமரா அம்சங்களும் உள்ளன.

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ மாடலில் புளூடூத், வைஃபை 802.11, 5ஜி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், ஒடிஜி, எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட பல ஆதரவுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








