அதுமட்டும் இல்ல மிச்சம் எல்லாம் வேறலெவல்- இன்பினிக்ஸ் நோட் 11எஸ் இந்திய அறிமுகம் உறுதி!

|

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. நோட் 11, 11 ப்ரோ மற்றும் இன்புக் எக்ஸ்1 லேப்டாப் உடன் இது வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இன்பினிக்ஸ் அதன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நோட் 11 தொடரில் நோட் 11 எஸ் என்ற ஸ்மார்ட்போனை இணைத்துள்ளது. தற்போது இந்தியாவில் நோட் 11 எஸ் வெளியீட்டை பீராண்ட் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் அடுத்த மாதம் இன்புக் எக்ஸ்1 மடிக்கணினியுடன் நோட் 11 மற்றும் நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்பினிக்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது வெளியீட்டு நிகழ்வு நோட் 11 எஸ் அறிகுறியாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் இந்திய வெளியீடு

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் இந்திய வெளியீடு

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இன்பினிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அனிஷ் கபூர் டீஸ் செய்துள்ளார். அவர் வரவிருக்கும் நோட் 11 ஸ்மார்ட்போனின் பாக்ஸை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருப்பினும் சரியான வெளியீட்டு தேதியை நிறுவனம் குறிப்பிடப்படவில்லை, இருப்பினும் டிசம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்ட அதே நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் இணையும் என கூறப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் அம்சங்கள்

நோட் 11 எஸ் சர்வதேச சந்தையில் முன்னதாகவே கிடைப்பதல் இதன் அம்சங்கள் நமக்கு முன்னதாகவே தெரியும். ஸ்மார்ட்போனில் 6.95 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல் முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் குறித்து பார்க்கையில் இது 50 மெகாபிக்சல் மெயில் லென்ஸ் மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்களை உள்ளடக்கிய குவாட் எல்இடி ஃபிளாஷ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு இது வரும் எனவும் கூறப்படுகிறது. 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவு, டிடிஎஸ் ஆடியோ ஆதரவோடு இரட்டை ஸ்பீக்கர்கள், லீனியர் மோட்டர் மற்றும் 3டி கிராபெனின் ஃபிலிம் அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இது இரட்டை 4ஜி வோல்ட்-இ, ப்ளூடூத் 5.2, ஆடியோ ஜாக் ஆதரவோடு வருகிறது.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை அம்சம்

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை அம்சம்

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை அம்சம் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.15700 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பு இன்றி ரூ.20,000 விலைப்பிரிவில் வரும் எனவும் இது உயர்நிலை ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 5ஜி இணைப்பு இல்லை என்றாலும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே சக்திவாய்ந்த சிப்செட் மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது.

புதிய இன்புக் எக்ஸ்1 லேப்டாப்

புதிய இன்புக் எக்ஸ்1 லேப்டாப்

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 என்ற அறிமுகத்தை கண்ணோட்டமாகவெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் இன்டல் கோர் ப்ராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் புதிய லேப்டாப் கோர் i3, கோர் i5, கோர் i7 என்ற மூன்று ப்ராசஸர் வேரியண்ட்களில் கிடைக்கும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த இன்புக் எக்ஸ்1 வெளிவரும் என்று கூறப்படுகிறது. இன்புக் எக்ஸ்1 லேப்டாப் மாடல் ஆனது 14-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 16:9 என்ற திரைவிகிதம், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக நோபல் ரெட், எல்வ்ஸ் கிரீன், ஸ்டார்ஃபால் கிரே மற்றும் எலிகண்ட் பிளாக் போன்ற நிறங்களில் இந்த புதிய இன்புக் எக்ஸ்1 லேப்டாப் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இன்புக் எக்ஸ்1 லேப்டாப்

புதிய இன்புக் எக்ஸ்1 லேப்டாப்

இந்த புதிய இன்புக் எக்ஸ்1 லேப்டாப் ஆனது விண்டோஸ் 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு இதன் எடை 1.48 கிலோகிராம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 55Whr பேட்டரி திறன் கொண்டுள்ளது இந்த லேப்டாப். இரண்டு யுஎஸ்பி 2.0 போர்ட், இரண்டு யுஎஸ்பி 3.0 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட்,SD கார்டு ரீடர் மற்றும் 2-in-1 ஹெட்ஃபோன் மற்றும் மைக் காம்போ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்புக் எக்ஸ்1 லேப்டாப் மாடல். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. மேலும் XOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் புளூடூத், வைஃபை 802.11, 5ஜி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், ஒடிஜி, எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட பல ஆதரவுகள் இவற்றில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Infinix Note 11s India Launch Confirmed: Expected Specs, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X