48எம்பி ரியர் கேமராவுடன் இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, 48எம்பி ரியர் கேமரா என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். ஆனாலும் இந்த சாதனம் ரூ.11,900-விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.95-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
பின்பு 1,080x2,460பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போன் மாடல்.

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. எனவேபயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் XOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்டுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் கேமரா அம்சங்களும் உள்ளன.

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

அதேபோல் இன்பினிக்ஸ் ஹாட் 11ஐ மாடலில் புளூடூத், வைஃபை 802.11, 5ஜி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், ஒடிஜி, எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட பல ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து சிறப்பு அம்சங்களையும் வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் டிஸ்பிளே வசதி
பெரியதாக இருப்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். பின்பு விரைவில் இன்பினிக்ஸ் நிறுவனம் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications