கட்டுப்படியாகுமா?- 6ஜிபி ரேம், 50எம்பி கேமராவுடன் இன்பினிக்ஸ் நோட் 11, 11s அறிமுகம்- விலை ரூ.15,000-க்கு கீழ்!

|

இன்பினிக்ஸ் அதன் புதிய முதன்மை ஸ்மார்ட்போன்களான இன்பினிக்ஸ் நோட் 11 மற்றும் நோட் 11 எஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் மலிவு விலையில் சிறந்த அம்சங்களுடன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்களின் முக்கிய ஈர்ப்பு குறித்து பார்க்கையில் இரண்டு போன்களும் ரூ.15000-க்கும் குறைவான விலைப் பிரிவில் வருகின்றன. புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில் நேர்த்தியான காட்சிகளை படம் பிடிக்கும் திறன் கொண்ட 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா உட்பட கேமரா அமைப்புகளை கொண்டிருக்கிறது. 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு வருகிறது.

இன்பினிக்ஸ் நோட் 11 அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 11 அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 1080x2400 பிக்சல்கள் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதம் மற்றும் நிலையான 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா ஏஐ லென்ஸ் கேமரா என டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமராவை கொண்டிருக்கிறது. இது சூப்பர் நைட் பயன்முறையுடன் வருகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் நோட் 11 ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியோடு கிடைக்கிறது. 4ஜி எல்டிஇ, வைஃபை, ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு கூடிய 6.95 இன்ச் பெரிய டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது. இது முழு எச்டி ப்ளஸ் 1080 x 2460 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் மெயின் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியை கொண்டிருக்கிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி மற்றும் 33 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது.

விலை மற்றும் கிடைக்கும் தேதி

விலை மற்றும் கிடைக்கும் தேதி

இன்பினிக்ஸ் நோட் 11 மற்றும் நோட் 11எஸ் இந்தியாவின் விலை மற்றும் கிடைக்கும் தேதி குறித்து பார்க்கலாம். இன்பினிக்ஸ் நோட் 11 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.11,999 என கிடைக்கிறது. இது டிசம்பர் 23 முதல் பிளிப்கார்ட் மூலம் கிடைக்கும் என கூறப்படுகிறது. செலஸ்டியல் ஸ்னோ, கிளேசியர் கிரீன் மற்றும் கிராஃபைட் பிளாக் ஆகிய வண்ண விருப்பத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது இந்தியாவில் ரூ.12999 என கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் உயர்நிலை மாடலான 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி வேரியண்ட் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 20 முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Note 11, Note 11S Launched in India with 50MP Camera, 6GB RAM and More: Price, Sale Date Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X