இந்தியாவில் : இன்பினிக்ஸ் ஸீரோ 4, ஸீரோ 4 ப்ளஸ் மற்றும் நோட் 4 (அம்சங்கள்).!

|

ஹாங்காங்கை சார்ந்த மொபைல் உற்பத்தியாளரான இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களை தொடர்ச்சியாக இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த டீஸரின் மூலம் அக்கருவி இன்பினிக்ஸ் நோட் 4 என்று அறியப்படுகிறது. இதற்கிடையில், டிரான்ச்சியன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் இஐனாகும் இன்பினிக்ஸ் அதன் இந்திய இணையத்தளத்தில், ஸீரோ 4 மற்றும் ஜீரோ 4 பிளஸ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவரவுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

செயலி

செயலி

இன்பினிக்ஸ் ஸீரோ 4 மற்றும் ஸீரோ 4 ப்ளஸ் ஆகிய கருவிகள் இந்தியாவுக்கு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் வெளியீட்டு தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சாதனங்களின் அம்சங்களை பொறுத்தமட்டில், இன்பினிக்ஸ் ஜீரோ 4 ஆனது 5.5 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 3 ஜிபி ரேம் உடன் இணைந்த 1.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் எம்டி6753 ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்லோ

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்லோ

மேலும் இது 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இது 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்லோவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் எக்ஸ்ஓஎஸ்-ன் கீழ் இயங்குகிறது.

32 ஜிபி மற்றும் 64 ஜிபி

32 ஜிபி மற்றும் 64 ஜிபி

மறுகையில் உள்ள இன்பினிக்ஸ் ஸீரோ 4 ப்ளஸ் ஆனது 5.98 அங்குல முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 2.5டி கிளாஸ் கொண்டுள்ளது. 4ஜிபி ரேம் உடன் இணைந்த 2.1ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் ஹீலியோ எக்ஸ்20 டிகா-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரண்டு சேமிப்பு விருப்பங்களுடன் வருகிறது. ஆனால் இந்த இரண்டும் இந்தியாவில் கிடைக்கக்கூடியதா என்பது பற்றிய விவரம் இல்லை.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

கருவியின் கேமராவைப் பொறுத்தவரை, ஸீரோ 4 பிளஸ் 20.7 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. முன்பக்கம் 13 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்லோவை அடிப்படையாகக் கொண்ட எக்ஸ்ஓஎஸ்-ன் கீழ் இயங்குகிறது.

5.7 இன்ச் டிஸ்ப்ளே

5.7 இன்ச் டிஸ்ப்ளே

ப்ளிப்கார்ட் டீஸரைப் பொறுத்தமட்டில், இன்பினிக்ஸ் நோட் 4 ஆனது ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கும். இன்பினிக்ஸ் நோட் 4 ஆனது ஒரு 5.7 இன்ச் டிஸ்ப்ளே மேல் 2.5டி கிளாஸ் கொண்ட டிஸ்பிளே மற்றும் ஒரு உலோக யூனிபாடி சட்டத்துடன் காட்சியளிக்கிறது.

16 ஜிபி

16 ஜிபி

2ஜிபி ரேம் உடன் இணைந்த ஒரு ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படும் இக்கருவியின் ஹோம பொத்தான் கைரேகை சென்சார் கொண்டுள்ளது, அது தொலைபேசி 0.15 விநாடிகளில் திறக்க உதவுகிறது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய நினைவகத்துடன் ஸ்மார்ட்போன் வருகிறது.

கேமரா

கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில், இரட்டை-எல்இடி ஃப்ளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. 4300எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இக்கருவி ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த எக்ஸ்ஓஎஸ் 2.2 கொண்டு இயங்குகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Looks Set to Debut in India Soon With Zero 4, Zero 4 Plus, Note 4 Smartphones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X