டூயல் கேமரா வசதியுடன் இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3எக்ஸ் அறிமுகம்: விலை?
இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
இந்திய சந்தையில் இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது இன்ஃபினிக்ஸ் நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், சாம்பல் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஹாட் எஸ்3எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1500 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த
ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனின் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.
இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சாதனத்தில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, பின்பு 4ஜி எல்டிஇ,வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், ஹெட்போன் ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3எக்ஸ் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications