Home
Mobile

நான்கு கேமராக்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 9 டிஸ்பிளே

இன்பினிக்ஸ் ஹாட் 9 டிஸ்பிளே

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படைடயாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மாhர்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இன்பினிக்ஸ் ஹாட் 9 சாதனத்தில் மீடியாடெக் ஹீலியோ ஏ25 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

16எம்பி பிரைமரி லென்ஸ்

16எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, பின்பு 10வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஆர் ஈமோஜி,ஏஆர் ஸ்டிக்கர்கள்

ஃபேஸ் அன்லாக், ஏஆர் ஈமோஜி,ஏஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் டிடிஎஸ் ஆடியோ டெக்னாலஜி போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 9 மாடல். பின்பு மேட் பிளாக், சியான், வயலட் மற்றும் லைட் ப்ளூ போன்ற வண்ண விருப்பங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.

 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது இந்திய மதிப்பின் படி ரூ.7,870 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 9 with MediaTek Helio A25 chipset announced : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X