அறிமுகமானது புதிய Infinix போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 (Infinix HOT 70) ஸ்மார்ட்போனை தற்போது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஹாட் 70 அம்சங்கள் (Infinix HOT 70 specifications): 6.78-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1576 பிக்சல்ஸ், 700 நிட்ஸ் பிரைட்னஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz Touch sampling rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜிஹ00 அல்டிமேட் 6என்எம் (Octa Core MediaTek Helio G100 Ultimate 6nm) பிராசஸர் உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இன்பினிக்ஸ் ஹாட் 70 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமல்லாமல், ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி ரியர் கேமரா உடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, டிடிஎஸ், டூயல் ஸ்பீக்கர்கள் என பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜி, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 70 போனின் விலை USD 124 (இந்திய மதிப்பில் ரூ.11,785) ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை USD 180 (இந்திய மதிப்பில் ரூ.17,550)-ஆக உள்ளது. கடைசியாக இதன் 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை USD 191 (இந்திய மதிப்பில் ரூ.18,250)- ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications