அடிச்சான் பாரு.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. SONY கேமரா.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் மாடலாக இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி (Infinix Hot 70 Pro 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிசைன், கலர் மற்றும் மேட்ரிக்ஸ் க்யூப் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. எப்போது வெளியாகும்? எந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே கொண்ட மாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஆனால், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வருவதால், பட்ஜெட் பிரியர்களுக்கு பொருத்தமாக இல்லை. ஆனால், இன்பினிக்ஸ் நிறுவனம், பட்ஜெட்டில் களமிறக்க இருக்கிறது. இருப்பினும், இது பெரிய டிஸ்பிளேவாக இருக்காது. கியூப் போன்ற சிறிய அளவில் இருக்கும்.

வருகிற செப்டம்பர் மாதத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனம், இதை உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க இருப்பதும், கலர், டிசைன் விவரங்களும் தெரியவந்துள்ளன. அதன்படி இதில் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் கியூப் (Active Matrix Cube) கிடைக்க இருக்கிறது.
இது ரியர் கேமரா பம்ப் அளவில் இருக்கும். இதில் நோட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ள முடியும். கால்கள், மியூசிக், கேமிங் மற்றும் சார்ஜிங் நோட்டிபிகேஷன்களை பார்க்கலாம். டைனாமிக் சைன் டிசைன் (Dynamic Shine Design) கொடுத்துள்ளது. தெர்மோ ஆரஞச் (Thermo Orange), மிராஜ் கிரீன் (Mirage Green) மற்றும் சில்க் க்ளோவ் பர்பிள் (Silk Glow Purple) கலர்களில் கிடைக்க இருக்கிறது.
மேலும், டைவ் ப்ளூ (Dive Blue) கலரும் கிடைக்க இருக்கின்றன. இந்த விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. ஓரிரு நாட்களில் பிளிப்கார்ட் தளத்தில் அதிகாரப்பூர்வ மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு அதில் அடுத்தடுத்து பீச்சர்கள் உறுதி செய்யப்படும். அதேபோல வெளியீட்டு தேதியும் உறுதி செய்யப்படும். ரூ.20,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. ஆகவே, பீச்சர்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அதன்படி 6.76 இன்ச் (1080 x 2344 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 760 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலுஷன் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ போகஸ் சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், பிக்சடு போகஸ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட்டை இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மாலி ஜி610 எம்சி2 ஜிபியு (Mali G610 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications