போட்டான் பாரு.. ரூ.2000 ஆபர் ரேட்ல SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் கியூப் (Active Matrix Cube) கொண்ட மாடலாக களமிறங்கிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி (Infinix HOT 70 Pro 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ரூ.2,000 தள்ளுபடி மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைப்பதால் விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆகவும் இருக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,999 ஆரம்ப விலைக்கு இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சில்க் குளோவ் பர்பிள் (Silk Glow Purple), டைவ் ப்ளூ (Dive Blue), தெர்மோ ஆரஞ்ச் (Thermo Orange) மற்றும் மிராஜ் கிரீன் (Mirage Green) ஆகிய கலர்களில் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். பீச்சர்கள் எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Infinix HOT 70 Pro 5G Specifications): ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.76 இன்ச் (1080 x 2344 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 760 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 910 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.
1500Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) கொண்ட மாடலாக இருக்கிறது.
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. விலாக் (Vlog), ஏஐ கேம் (Al Cam), போர்ட்ராய்டு (Portrait), சூப்பர் நைட் (Super Night), ஸ்கை ஷாப் (Sky Shop) உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன.
மேலும், டூயல் வீடியோ (Dual Video), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), அல்ட்ரா எச்டி (Ultra HD), ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portrait) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. 8 எம்பி செல்பீ கேமரா செல்பீ கேமரா கிடைக்கிறது. 10W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரியை இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
7.85 எம்எம் தடிமன் மற்றும் 204 கிராம் எடை கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. வை-பை 801.11 (Wi-Fi 802.11) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டியை இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ற மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
