தெறிக்க விட்டாப்ல.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. SONY கேமரா.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
மேட்ரிக்ஸ் டிஸ்பிளே கொண்ட மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்துகின்றன. இதில் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனும் சேர்ந்துள்ளது. பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமராவுடன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
ஆக்டிவ் மேட்ரிக்ஸ் கியூப் (Active Matrix Cube) கொண்ட மாடலாக இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி (Infinix HOT 70 Pro 5G) ஸ்மார்ட்போன், இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. கால், மெசேஜ், பேட்டரி ஸ்டேட்டஸ் உள்ளிட்ட நோட்டிபிகேசன்களை இந்த ஆக்டிவ் மேட்ரிக்ஸ் கியூப் வழியாக பார்த்து கொள்ளலாம். மற்ற பீச்சர்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கின்றன.

இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Infinix HOT 70 Pro 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட்டை இந்த இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.76 இன்ச் (1080 x 2344 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 760 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 910 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.85 எம்எம் தடிமன் வருகிறது. 204 கிராம் எடை கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஐஆர் சென்சார் கொண்ட மாடலாக இது இருக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. சில்க் குளோவ் பர்பிள் (Silk Glow Purple), டைவ் ப்ளூ (Dive Blue), தெர்மோ ஆரஞ்ச் (Thermo Orange) மற்றும் மிராஜ் கிரீன் (Mirage Green) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart), இன்பினிக்ஸ் இந்தியா (Infinix India) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எச்டிஎப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,999 விலைக்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications
