Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புதிய இன்பினிக்ஸ் 5ஜி போன்.. IP68 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சமீபத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி (Infinix HOT 70 Pro 5G) போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய இன்பினிக்ஸ் போன் நாளை (செப்டம்பர் 7) மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி அம்சங்கள்: 6.76-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் எல்சிடி டிஸ்பிளே உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2344 பிக்சல்ஸ், 910 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நாளை விற்பனைக்கு வரும் புதிய இன்பினிக்ஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம்(Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாலி - ஜி610 எம்சி4 ஜிபியு (Mali - G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), டூயல் மைக்ரோபோன்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த புதிய போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி போன் வெளியாகி உள்ளது. XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி சோனி ஐஎம்எஸ்882 ரியர் கேமரா உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவகள் இந்த போனில் உள்ளன.

இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி விலை

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி மாடலின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.

தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. சில்க் குளோவ் பர்பிள் (Silk Glow Purple), டைவ் ப்ளூ (Dive Blue), தெர்மோ ஆரஞ்ச் (Thermo Orange) மற்றும் மிராஜ் கிரீன் (Mirage Green) ஆகிய கலர்களில்இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Infinix HOT 70 Pro 5G will go on sale for first time tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X