Home
Mobile

அடுத்த Infinix 5ஜி போன் ரெடி.. 6000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி (Infinix Hot 70 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Infinix Hot 70 Pro 5G specifications): 6.76-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடுத்த Infinix 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

50எம்பி ரியர் கேமரா உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் பின்புறம் டாட் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே ( Dot Matrix display) வசதியும் உள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7100 5ஜி சிப் (MediaTek Dimensity 7100 5G chip) உடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி
ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

8ஜிபி வரை மற்றும் 256ஜி வரை மெமரி உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸலாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளன.

அடுத்த Infinix 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

6000எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 70 Pro 5G specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X