அறிமுகமானது புது இன்பினிக்ஸ் 5ஜி போன்.. சோனி கேமரா.. 6000எம்ஏஎச் பேட்டரி.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி (Infinix Hot 70 Pro 5G) ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Infinix Hot 70 Pro 5G specifications): 6.76-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( Dimensity 7100 chipset), 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான டைமன்சிட்டி 7100 சிப்செட் (Dimensity 7100 chipset) உடன் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். AI வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் அந்த அசிஸ்டன்ட்டை இயக்குவதற்கான ஒன்-டேப் AI பட்டனையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
50எம்பி Sony IMX882 மெயின் கேமரா + 8எம்பி செகண்டரி லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா உடன் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மர்ரட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி போனில் உள்ளன. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இந்த புதிய இன்பினிக்ஸ் போனில் உள்ளன.
சிங்கிள் பாட்டம் பயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom Firing Speakers) இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். அதேபோல் light-reactive ஹாலோகிராஃபிக் பேனல் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆகவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
டூயல் சிம் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை,ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. தற்போது இந்த போன் அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும்.
Image Credit: Infinix Global


Click it and Unblock the Notifications