Home
Mobile

இன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

இன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்போது குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.19-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி டூயல் கேமரா ஆதரவு உள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் முன்புறமும் 13எம்பி+ 2எம்பி டூயல் கேமரா ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி-22 சிப்செட் வசதி உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

இன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரூ.9,999-விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Infinix Hot 7 Pro Launched In India camera ram specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X