ரூ.10000 க்கும் கம்மி விலை.. 120Hz டிஸ்பிளே, 50MP கேமரா, 45W சார்ஜிங், 5160mAh பேட்டரி.. Infinix-ன் புது போன்!
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் அதன் ஹாட் சீரிஸின் கீழ் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ (Infinix Hot 60i) மாடல் ஆகும். இது இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் 60 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யாட்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் ஆகும்
இப்போதைக்கு வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் எப்போது வேண்டுமானலும் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் இன்பினிக்ஸ் ஹாட் 50 (Infinix Hot 50) மாடல் இந்திய சந்தையில் வாங்க கிடைக்கிறது. சரி இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ மாடலின் விலை, அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்:

இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Infinix Hot 60i Major Specifications):
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் LCD டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்டிமேட் சிப்செட் (MediaTek Helio G81 Ultimate SoC)
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 256ஜிபி வரை பில்ட்-இன் ஸ்டோரேஜ்
- 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,160mAh பேட்டரி
இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் (Infinix Hot 60i Price Details): 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் ஆப்ஷன் BDT 13,999 க்கு (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.9,800 க்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் BDT 16,499 க்கு (தோராயமாக ரூ.11,500 க்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்லீக் பிளாக் மற்றும் டைட்டானியம் கிரே ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி தற்போது இது பங்களாதேஷில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; இந்தியா மற்றும் பிற சந்தைகளுக்கு எப்போது வரும் என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை.
இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Infinix Hot 60i Full Specifications): டூயல் சிம் (நானோ+நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் Android 15 ஐ அடிப்படையாக கொண்ட XOS 15.1 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் FHD+ (1080 × 2460 பிக்சல்ஸ்) IPS LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே - 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 396ppi மற்றும் 800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போனில் 12nm ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G81 அல்டிமேட் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போனில் எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், குறிப்பிடப்படாத 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவும் உள்ளன. முன்பக்கத்தில், எப்/2.0 அபெர்க்ஷர் கொண்ட 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இன்ஃபினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி LTE,வைஃபை 5, ப்ளூடூத் 5, என்எப்சி (NFC), ஆகியவைகளை ஆதரிக்கிறது. மேலும் இது யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் வருகிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஒன்றும் உள்ளது,


Click it and Unblock the Notifications