வீட்டுக்கு 2 ஆர்டர்.. அடிமட்ட பட்ஜெட்ல புது 5G போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 8GB ரேம்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலான இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி (Infinix Hot 60i 5G) போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ.10,000 பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 8 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், புதுவித கேமரா டிசைனில் வெளியாக இருக்கிறது. இந்த ஹாட் 60ஐ 5ஜி போனின் வெளியீட்டு தேதி, விற்பனை மற்றும் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று இந்த இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதையும் இன்பினிக்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனால் டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி மற்றும் கலர் ஆப்ஷன்கள் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் அதில் வெளியாகி இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி அம்சங்கள் (Infinix Hot 60i 5G Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் (Waterdrop Notch) கிடைக்கிறது. இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ எஸ்டென்டர் (AI Extender) பீச்சர்கள் கிடைக்கின்றன.
மேலும், ஏஐ இமேஜ் ஜெனரேட்டர் (AI Image Generator), ஏஐ கால் டிரான்லேஷன் (AI Call Translation) மற்றும் ஏஐ வால்பேப்பர் (AI Wallpaper) போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி போனில் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 1600 சார்ஜிங் சர்க்கிள் கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 128 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்க இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portraits) மற்றும் சூப்பர் நைட் (Super Night) ஆகிய பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமல்லாமல்ஸ எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) கிடைக்கிறது. ஆகவே, சிம் கார்டு இல்லாமல், ப்ளூடூத் மூலம் கால் செய்து கொள்ளும்படி வால்கீ-டால்கீ கனெக்டிவிட்டி கிடைக்கிறது.
ஆனால், இந்த பீச்சரை இன்பினிக்ஸ் டு இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேட் பினிஷிங் கொண்ட ஸ்லீக் பிளாக் (Sleek Black), ஷேடோ ப்ளூ (Shadow Blue) மற்றும் மான்சூன் கிரீன் (Monsoon Green) கலர்களில் வெளியாக இருக்கிறது.
மேலும், பிளம் ரெட் (Plum Red) கலரும் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. ஆனால், விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.10,000 பட்ஜெட்டில் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, இன்பினிக்ஸ் பிரியர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








