ஆக்.21-க்கு அப்புறம் இதுதான்.. ரூ.8,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி (Infinix Hot 60i 5G) போன் வெளியாகிவிட்டது. இந்த பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 8 ஜிபி ரேம் கொண்ட மாடலாக கிடைக்க இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் கொண்ட இந்த இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலாக இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி வந்துள்ளது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஸ்மார்ட்போனாக விற்பனைக்கு வர இருக்கிறது. முந்தைய பட்ஜெட் மாடல்களை போலல்லாமல், கேமரா டிசைன் புதிதாக இருக்கிறது. முழு பீச்சர்களும் பக்காவாக தெரிகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி அம்சங்கள் (Infinix Hot 60i 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) கிடைக்கிறது. பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core 6nm MediaTek Dimensity 6400) சிப்செட் கிடைக்கிறது.
இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது. இந்த எக்ஸ்ஓஎஸ் 15 மூலம் கேமராவில் ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portraits), சூப்பர் நைட் (Super Night), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ எஸ்டென்டர் (AI Extender) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஏஐ இமேஜ் ஜெனரேட்டர் (AI Image Generator) உள்ளது.
இதுபோக ஏஐ கால் டிரான்லேஷன் (AI Call Translation) செய்து கொள்ளலாம். மொபைல் நெட்வொர்க் இல்லாமலேயே ப்ளூடூத் மூலம் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளும்படி வாக்கி-டாக்கி பீச்சர் கிடைக்கிறது. ஆனால், இதற்கு 2 இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வேண்டும். அவற்றை ஒன்றுடன் ஒன்றை வாக்கி-டாக்கி போல பயன்படுத்த முடியும்.
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி போனில் 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பெரிய பேட்டரியுடன் 8.14 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது.6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
மேலும், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 240Hz டச் சாம்பிங் ரேட் மற்றும் 670 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் மாடலில் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவுக்கு பிடிஏஎப் (PDAF) போகஸ் மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.9,299ஆக இருக்கிறது. ரூ.300 தள்ளுபடி போக ரூ.8,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யலாம். ஸ்லீக் பிளாக், ஷேடோ ப்ளூ, மான்சூன் கிரீன் மற்றும் பிளம் ரெட் ஆகிய நான்கு கலர்களில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








