Home
Mobile

இதுதான் மிரளவிடப் போகுது.. வெறும் ரூ.9,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் பெற்ற இன்பினிக்ஸ் நிறுவனமானது, அதன் இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி (Infinix Hot 60i 5G) போனின் வெளியீட்டை உறுதி செய்துள்ளது. 6000mAh பேட்டரி, IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை நம்ப முடியாத பட்ஜெட்டில் கொடுக்க இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 எஸ்ஓசி கொண்ட இந்த இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று வெறும் ரூ.10,499 பட்ஜெட்டில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி+ (Infinix Hot 60 5G+) போன் களமிறங்கியது. அடிமட்ட பட்ஜெட்டில் கிடைத்ததால், கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது, அதைவிட கம்மியான பட்ஜெட்டில் இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி போனை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதான் மிரளவிடப் போகுது.. வெறும் ரூ.9,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி!

இன்பினிக்ஸ் நிறுவனமே, இந்த ஹாட் 60ஐ 5ஜி போனானது இந்திய மார்கெட்டில் விரைவில் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சிப்செட், பேட்டரி மற்றும் டிசைன் விவரங்களையும் உறுதி செய்திருக்கிறது. கூடுதலாக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இதில் ஏஐ பீச்சர்களும் கிடைக்க இருக்கின்றன.

இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி அம்சங்கள் (Infinix Hot 60i 5G Specifications): இந்த ஹாட் 60ஐ 5ஜி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6400 SoC) கிடைக்க இருக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவை கொடுக்க இருக்கிறது.

டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மற்றும் ஹரிசோன்டல் கேமரா டிசைனை கொடுக்கிறது. இந்த டிசைனுடன் ஷேடோ ப்ளூ (Shadow Blue), மான்சூன் கிரீன் (Monsoon Green), ஸ்லீக் பிளாக் (Sleek Black) மற்றும் பிளம் ரெட் (Plum Red) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த கேமராவில் சர்கிள் டூ சர்ச் மட்டுமல்லாமல், பல்வேறு ஏஐ பீச்சர்களும் வர இருக்கிறது.

ஆகவே, ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ எஸ்டென்டர் (AI Extender), ஏஐ கால் டிரான்லேஷன் (AI Call Translation), ஏஐ வால்பேப்பர் (AI Wallpaper) மற்றும் ஏஐ இமேஜ் ஜெனரேட்டர் (AI Image Generator) போன்ற பீச்சர்களும் கிடைக்க இருக்கின்றன. இந்த பீச்சர்களே இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு தேதி விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி போனின் விலை நிச்சயம் ரூ.10,000 பட்ஜெட்டுக்கு மட்டுமே இருக்கும். ஏனென்றால், இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி+ போனின் விலை ரூ.10,499ஆக இருக்கிறது. ஆகவே, இது அதைவிட மலிவான விலைக்கு மட்டுமே இது வெளியாகும். அதேபோல ரூ.9,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது, ஹாட் 60 5ஜி+ போனை பற்றி பார்ப்போம்.

முன்னதாக வெளியான இந்த ஹாட் 60 5ஜி+ போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 15 கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 5200mAh பேட்டரி, 18W சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 6.7 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 60i 5G With 50 Camera To Launch India Soon Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X