அட.. என்ன என்னவோ பண்ணுதோ.. One Tap AI Button உடன் புதிய Infinix 5ஜி போன்.. என்ன மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனமானது இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி (Infinix Hot 60 5G) என்கிற புதிய ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை அறிவித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், இன்பினிக்ஸ் ஹாட் 60 சீரீஸின் கீழ் முதல் மாடல் ஆக கடந்த ஜூன் 29 ஆம் தேதியன்று இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ (Infinix Hot 60i) வங்கதேசத்தில் அறிமுகமானது.
இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ அறிமுகமான வேகத்தில், இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி மாடலின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் - இது ஒரு பிரத்யேக ஒன் டாப் ஏஐ பட்டன் (One Tap AI Button) உடன் வருகிறது. இது ஸ்மார்ட்போனுடன் "தொடர்பு கொள்ள" ஒரு சிறந்த வழியை அறிமுகப்படுத்துகிறது.

ஒன் டாப் ஏஐ பட்டன் அப்படி என்ன செய்யும்? இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில், பவர் மற்றும் வால்யூம் பட்டன்களுக்கு கீழே அமைந்துள்ள ஒன் டாப் ஏஐ பட்டன் ஆனது பல்வேறு செயல்பாடுகளில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கண்ட்ரோல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது சிங்கிள் பிரஸ், டபுள் பிரஸ் மற்றும் லாங் பிரஸ்-ஐ ஆதரிக்கிறது. மேலும் 30 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பயன்பாடுகளுக்கு மேப்பிங் செய்யும் ஆதரவையும் வழங்குகிறது. வேகமான பணிப்பாய்வுகளை தேடும் வல்லுநர்கள், செயல்திறனை மேம்படுத்தும் கேமர்கள் அல்லது விரைவான அக்சஸ் டூல்களை தேடும் மாணவர்கள் என யாராக இருந்தாலும் சரி - இந்த பட்டன் அனைவருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டன் ஆப்களை தொடங்குவது மட்டுமல்லாமல் ஸ்க்ரீனில் காட்டப்படும் கன்டென்ட்ட்டிற்கும் பதிலளிக்கிறது. இது சர்க்கிள் டூ சேர்ச் போன்ற அம்சங்களையும் வழங்கும். லாங் பிரஸ் செய்வதன் மூலம் இன்பினிக்ஸ் பிராண்டின் ஒருங்கிணைந்த ஏஐ அசிஸ்டென்ட் ஆன Folax-ஐ செயல்படுத்த முடியும். இது மீட்டிங் ரெக்கார்ட்களை சம்மரைஸ் செய்யும், ஆவணங்களை மொழிபெயர்க்கும், அலாரங்களை செட் செய்யும் மற்றும் வாய்ஸ் எனேபிள்டு பதில்களை கூட வழங்கும்
இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள்: அதிகாரப்பூர்வ இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி மைக்ரோசைட்டின் படி, இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 7020 சிப்செட், LPDDR5x ரேம், 90fps கேமிங் மற்றும் 7.8mm ஸ்லிம் சேசிஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் Shadow Blue, Tundra Green மற்றும் Sleek Black ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள விவரங்கள் ஜூலை 11 அறிமுகத்தின் போது தெரியவரும்.
இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Infinix Hot 60i Full Specifications): டூயல் சிம் (நானோ+நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் Android 15 ஐ அடிப்படையாக கொண்ட XOS 15.1 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் FHD+ (1080 × 2460 பிக்சல்ஸ்) IPS LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே - 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 396ppi மற்றும் 800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போனில் 12nm ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G81 அல்டிமேட் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போனில் எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், குறிப்பிடப்படாத 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவும் உள்ளன. முன்பக்கத்தில், எப்/2.0 அபெர்க்ஷர் கொண்ட 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இன்ஃபினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி LTE,வைஃபை 5, ப்ளூடூத் 5, என்எப்சி (NFC), ஆகியவைகளை ஆதரிக்கிறது. மேலும் இது யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் வருகிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஒன்றும் உள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் (Infinix Hot 60i Price Details): 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் ஆப்ஷன் BDT 13,999 க்கு (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.9,800 க்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் BDT 16,499 க்கு (தோராயமாக ரூ.11,500 க்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications








