Home
Mobile

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Infinix 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் (Infinix HOT 60 5G Plus) ஸ்மார்ட்போனை நாளை (ஜூலை 11) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் அம்சங்கள் (Infinix HOT 60 5G Plus Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன் டேப் ஏஐ (One Tap AI) பட்டன் உடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் மேம்பட்ட AI அம்சங்கள் இருப்பதாக இன்பினிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப் (Dimensity 7020 chip) வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)ஆதரவுடன் இந்த அசத்தலான போன் வெளிவரும்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதியுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5200mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய போன் வெளிவரும். அதேபோல இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை ஸ்லீக் பிளாக் (Sleek Black), ஷேடோ ப்ளூ (Shadow Blue)மற்றும் கிரீன் நிறங்களில் வாங்க முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix HOT 60 5G Plus will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X