Home
Mobile

ரூ.10,499 பட்ஜெட்ல பட்டைய கிளப்பிய Infinix.. 50எம்பி கேமரா.. ஐபி64 ரேட்டிங்.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் (Infinix HOT 60 5G Plus) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த போன். இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் அம்சங்கள் (Infinix HOT 60 5G Plus Specifications): இந்த போனில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டனுக்கு கீழ் ஒன் டேப் ஏஐ (One Tap AI)பட்டன் வசதியும் உள்ளது. இது மேம்பட்ட ஏஐ அம்சங்களை பயன்படுத்த உதவுகிறது. அதுவும் ஏஐ கால் அசிஸ்டண்ட்(AI Call Assistant), ஏஐ ரைட்டிங் அசிஸ்டண்ட் (AI Writing Assistant), ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் ( AI voice assistant) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை இந்த புதிய பட்டன் மூலம் பயன்படுத்த முடியும். இதுதவிர பல சிறப்பான அம்சங்களை வழங்குகிறது புதிய ஒன் டேப் ஏஐ பட்டன்.

ரூ.10,499 பட்ஜெட்ல பட்டைய கிளப்பிய Infinix.. எந்த மாடல்?

6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப் (Dimensity 7020 chip) வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. IP64 டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) ஆதரவுடன் இந்த அசத்தலான போன் வெளிவந்துள்ளது.

50எம்பி ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5200mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த இன்பினிக்ஸ் போனில் உள்ளன. ஷேடோ ப்ளூ (Shadow Blue), ஸ்லீக் பிளாக் (Sleek Black) மற்றும் கிரீன் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ரூ.10,499 பட்ஜெட்ல பட்டைய கிளப்பிய Infinix.. எந்த மாடல்?

XOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது. வரும் ஜூலை 17-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் இன்பினிக்ஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் இந்த புதிய போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 60 5G Plus launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X