Home
Mobile

மார்க்கெட்டே திணறப்போகுது.. 12ஜிபி ரேம்.. Dimensity 7020 சிப்.. வருகிறது புது Infinix போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் (Infinix HOT 60 5G Plus) ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும். அதேபோல் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் அம்சங்கள் (Infinix HOT 60 5G Plus Specifications): ஒன் டேப் ஏஐ (One Tap AI) பட்டன் உடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் மேம்பட்ட AI அம்சங்கள் இருப்பதாக இன்பினிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

மார்க்கெட்டே திணறப்போகுது.. வருகிறது புது Infinix போன்.. எந்த மாடல்

அதேபோல் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப் (Dimensity 7020 chip) வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி யன்படுத்தலாம்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதியுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos)மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்லீக் பிளாக் (Sleek Black), ஷேடோ ப்ளூ (Shadow Blue)மற்றும் கிரீன் நிறங்களில் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

குறிப்பாக வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix HOT 60 5G Plus 5G india launch date revealed: check specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X