மிரளுது பட்ஜெட்.. ரூ.10000 போதும்.. BYBASS சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 48MP கேமரா.. எந்த மாடல்?
பஞ்ச்-ஹோல் டைனாமிக் பார் டிஸ்பிளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 48 எம்பி கிரிஸ்டல் கிளியர் கேமரா, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பைபாஸ் சார்ஜிங், இன்பினிக்ஸ் ஏஐ போன்ற டெக்னாலஜிகளுடன் அடிமட்ட பட்ஜெட்டில் இன்பினிக்ஸ் ஹாட் 50ஐ (Infinix Hot 50i) போன் களமிறங்கி இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் மாடலின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் விற்பனை விவரங்கள் என்ன? உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.
இந்திய மார்கெட்டில் அடிமட்ட விலையில் பக்கா பேட்டரி டெக்னாலஜிகளுடன் வெளியாகிய இன்பினிக்ஸ் மாடல்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது, அடுத்த போனை களமிறக்க இன்பினிக்ஸ் திட்டமிட்டுள்ளது. குளோபல் மார்கெட்டில் இன்பினிக்ஸ் ஹாட் 50ஐ மாடலை களமிறக்கி இந்திய பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 50ஐ அம்சங்கள் (Infinix Hot 50i Specifications): இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இது வழக்கமான பட்ஜெட் மாடல்களில் கிடைப்பதுதான். ஆனால், இந்த போனில் ஓவர்நைட் சார்ஜிங் புரொடெக்சன் (Overnight Charging Protection) மற்றும் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) சப்போர்ட் வருகிறது. ஓவர்ஹீட்டிங் கன்ட்ரோல் உள்ளது.
ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு பக்கா பட்ஜெட் மாடலாக இந்த போன் இருக்கும். டிஸ்பிளேவை பார்க்கையில், 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இருப்பினும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-On Display) மாடலாகும். பஞ்ச-ஹோல் டிசைன் கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் போன்களில் கிடைக்கும் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் வருகிறது. மேலும், 240HZ டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் உள்ளது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட மாடல்கள் வருகின்றன. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இதுபோக 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தலாம். இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50ஐ போனில் ஆண்டார்ய்டு 14 ஓஎஸ் கோ எடிஷன் (Android 14 Go Edition) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி81 (MediaTek Helio G81) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்ஓஎஸ் 14.0 (XOS 14.0) மற்றும் மாலி ஜி51 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 48 ஜிபி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) கிடைக்கிறது. ஆகவே, ப்ளோக்ஸ் ஏஐ அசிஸ்டன்ட் மற்றும் டெக்ஸ்ட் ஜென்ரேட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது. நான்கு கலர்களில் வெளியாகி இருக்கிறது.
ஸ்லீக் பிளாக் (Sleek Black), சேஜ் கிரீன் (Sage Green), டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் ட்ரீம் பர்பிள் (Dreamy Purple) கலர் கொண்டிருக்கிறது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.9,237 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








